E   |   සි   |  

2020 செப்டெம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான அநுராதபுர மாவட்ட செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கைகளும் ஆண்டுக் கணக்குகளும்
(ii)    2019 ஆம் ஆண்டுக்கான மன்னார் மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2019 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்கறிக்கையும்
(iv)    2019 ஆம் ஆண்டுக்கான கண்டி மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்கு அறிக்கை
(v)    2019 ஆம் ஆண்டுக்கான ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    2019 ஆம் ஆண்டுக்கான மாத்தறை மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vii)    2019 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(viii)    2019 ஆம் ஆண்டுக்கான கொழும்பு மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix)    2019 ஆம் ஆண்டுக்கான காலி மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x)    2019 ஆம் ஆண்டுக்கான கேகாலை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(xi)    2019 ஆம் ஆண்டுக்கான மொனராகலை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xii)    2019 ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiii)    2019 ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை மற்றும் கணக்கு அறிக்கை
(xiv)    2019 ஆம் ஆண்டுக்கான மாத்தளை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை மற்றும் கணக்கு அறிக்கை
(xv)    2019 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை மற்றும் கணக்கு அறிக்கை
(xvi)    2019 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xvii)    2019 ஆம் ஆண்டுக்கான வவுனியா மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xviii)    2019 ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை மற்றும் கணக்கு அறிக்கை
(xix)    2019 ஆம் ஆண்டுக்கான குருணாகல் மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xx)    2019 ஆம் ஆண்டுக்கான புத்தளம் மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(xxi)    2019 ஆம் ஆண்டுக்கான பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxii)    2019 ஆம் ஆண்டுக்கான பொலன்னறுவை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகளும் கணக்குகளும்
(xxiii)    2019 ஆம் ஆண்டுக்கான பதுளை மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கையும் வருடாந்த கணக்குகளும்
(xxiv)    2019 ஆம் ஆண்டுக்கான களுத்துறை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(xxv)    2019 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை மற்றும் கணக்குகள் அறிக்கை
(xxvi)    2019 ஆம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் ஆண்டுக் கணக்குகள்


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாஸ

அழிவை எதிர்நோக்கியுள்ள ஆனைவிழுந்தான் ஈர வலயம்

மேற்சொன்ன வினாவிற்கு வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் கௌரவ சீ.பீ. ரத்நாயக்க அவர்கள் பதிலளித்தார்.


தனிப்பட்ட விளக்கங்கள்

கௌரவ (திருமதி) தலதா அதுகோரல அவர்கள் தனக்கெதிராக கௌரவ பிரேமலால் ஜயசேக்கர அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக தனிப்பட்ட விளக்கமொன்றினை வழங்கினார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 19 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது:-

(i)    உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஒன்பது கட்டளைகள்
(ii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பத்து கட்டளைகள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜகத் குமார அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1926 மணியளவில் பாராளுமன்றமானது 2020 செப்டெம்பர் 10ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks