E   |   සි   |  

படிகள் அனைத்து அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள்
அமர்வுப் படி ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்திற்கும் சமுகமளிப்பதற்காக ரூ. 2,500/=.
குழுப் படி அமர்வு இல்லாத தினங்களில் குழு நடைபெறும்போது ஒவ்வொரு குழுக் கூட்டத்திற்கும் சமுகமளிப்பதற்காக ரூ. 2,500/=. (அமர்வு தினங்களில் நடைபெறும் குழுக்கூட்டத்திற்கு சமுகமளிப்பதற்கு படியெதுவும் செலுத்தப்படுவதில்லை.)
அலுவலகப் படி அலுவலகமொன்றைப் பராமரிப்பதற்கு ரூ. 100,000/= வழங்கப்படுகின்றது.

படிகள் கௌரவ அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கௌரவ உறுப்பினர்கள்
உறுப்பினர்களின் படி பாராளுமன்றத்தால் செலுத்தப்படுவதில்லை ரூ. 54,285.00
கேளிக்கைப் படி ரூ. 1,000/=
ஓட்டுநர்களின் படி ரூ. 3,500.00 (பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சினால் சாரதி ஒருவர் வழங்கப்பட்டால், அப்பாராளுமன்ற உறுப்பினருக்குப் பாராளுமன்றத்தினால் சாரதிப் படி வழங்கப்படமாட்டாது.)
எரிபொருள் படி ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தாம் தெரிவு செய்யப்பட்ட மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்காக அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் மாவட்டத்திற்கு பாராளுமன்றத்திலிருந்தான தூரத்தை கருத்திற்கொண்டும், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் லீற்றர் அளவின் அடிப்படையிலும் ஒவ்வொரு மாதத்தினதும் 1ஆம் திகதி சந்தையில் நிலவும் ஒரு லீற்றர் டீசலின் அங்கீகரிக்கப்பட்ட விலையின் (உதாரணமாக, 2026 ஒக்டோபர் மாதத்தில் ஒரு லீற்றர் டீசலின் அங்கீகரிக்கப்பட்ட விலை ரூ. 292/-), அடிப்படையிலும் எரிபொருள் படி வழங்கப்படுகின்றது.

(கொழும்பு-283.94, கம்பஹா/களுத்துறை-355.58, கேகாலை/குருநாகல்/இரத்தினபுரி/காலி/கண்டி-426.35, மாத்தளை/புத்தளம்/மாத்தறை/நுவரெலியா-497.12, பொலன்னறுவை/பதுளை/ஹம்பாந்தோட்டை/வன்னி/மொனராகலை/அனுராதபுரம்/திருகோணமலை-568.76, மட்டக்களப்பு/திகாமடுல்ல/யாழ்ப்பாணம்-639.53, தேசியப் பட்டியல்-419.76)
தொலைபேசிப் படி நிலையான இணைப்பு மற்றும் கையடக்கத் தொலைபேசிக்காக மாதாந்தம் ரூ. 50,000.00 வழங்கப்படும். (தொலைபேசி விலைப்பட்டியல்களுக்கான கொடுப்பனவுகளோ அல்லது மீளளிப்புகளோ இல்லை)
தனிப்பட்ட பணியாட்டொகுதியினருக்கான போக்குவரத்துப் படி பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பணியாட்டொகுதி உறுப்பினர்களின் போக்குவரத்துச் செலவுகளை ஈடுசெய்வதற்காக மாதம் ஒன்றுக்கு ரூ. 15,000/= வழங்கப்படுகின்றது
இலவச தபாற்கட்டண வசதிகள் ரூ. 500,000/= பெறுமதியான முத்திரைகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் வருடாந்தம் வழங்கப்படுகின்றன. (காலாண்டிற்கு ரூ. 125,000/=)

கண்காணிப்பு உறுப்பினரின் படி, வாழ்வாதாரப் படி, வீட்டுப் படி, புகையிரத அனுமதிச்சீட்டுகள் அல்லது பத்திரிகைப் படி போன்ற வேறேதேனும் கொடுப்பனவுகள் இல்லை.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks