01

E   |   සි   |  

காண்க


2026, ஜனவரி 23ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 பெப்ரவரி மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2026 பெப்ரவரி 03 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - அங்கீகரிக்கப்படவுள்ளது
(இவ்வொழுங்குவிதிகள் 2026.01.23 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.01.23ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 3(4) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2026 பெப்ரவரி 04 புதன்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை
(சுதந்திர தினம் – பொது விடுமுறை)
 

2026 பெப்ரவரி 05 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) இலங்கை நிலையான சொத்து உயர்தொழிலர்கள் நிறுவகம் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(2026.01.23 ஆம் திகதிய 126 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 ஆம் இலக்க விடயம்)
(ii) கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தப்படாப் பொதுக் காவுநர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(மேற்சொன்ன சட்டமூலங்கள் (ii) மற்றும் (iii) ஆகியன 2026.01.20 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், இச்சட்டமூலங்களுக்கு எதிராக அரசியலமைப்பின் 121 ஆம் உறுப்புரையின் பிரகாரம் எதுவிதி மனுக்களும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாதவிடத்து எடுத்துக் கொள்ளப்படும்)
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 

2026 பெப்ரவரி 06 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00

பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன—
(i) தேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவுப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்பினை வழங்குதல்
(கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி)
(ii) இலங்கை வெளிநாட்டு சேவைக்காக நியமனங்கள் வழங்கப்படுவதை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்
(கௌரவ சமிந்த விஜேசிறி)
(iii) இலங்கையிலுள்ள விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபடச் செய்தல்
(கௌரவ ரவி கருணாநாயக்க)
(iv) அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் (கௌரவ லால் பிரேமநாத்)
(v) பேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் (கௌரவ ரோஹண பண்டார)
(vi) பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல் (கௌரவ நலின் பண்டார ஜயமஹ)
(vii) பைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல் (கௌரவ ரவீந்திர பண்டார)

பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks