பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 31 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் இருபத்து ஓராம் திருத்தத்தின் மூலம் தற்போதைய அரசியலமைப்புப் பேரவை அறிமுகப்படுத்தப்பட்டது.
அரசியலமைப்பின் 41அ என்னும் உறுப்புரையின் கீழ் அரசியலமைப்புப் பேரவையின் (‘பேரவை’ எனக் குறிப்பீடுசெய்யப்படும்) உறுப்பினர்கள் பின்வருமாறு:
அரசியலமைப்பின் 41அ (2) என்னும் உறுப்புரைக்கு இணங்க சபாநாயகர் பேரவையின் தவிசாளராதல் வேண்டும்.
மேற்குறித்த வகுதிகள் ஒவ்வொன்றின் கீழும் பேரவைக்கு உறுப்பினர்களை நியமிக்கையில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை முறையை அரசியலமைப்பு எடுத்துரைக்கின்றது. மேலே உள்ள (உ) என்னும் உட்பந்தியில் குறிப்பீடுசெய்யப்பட்ட ஐந்து ஆட்களைப் பெயர்குறித்து நியமிக்கையில், பேரவையின் ஆக்கவமைவானது உயர் தொழில் மற்றும் வேறுபட்ட சமூகங்கள் உள்ளிட்ட இலங்கை சமூகத்தினரின் பல்லின சமுதாயங்களைப் பிரதிபலிக்கின்றது என்பதை பிரதம அமைச்சர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்துதல் வேண்டும்.
மேலே உள்ள (உ) என்னும் உட்பந்தியின் கீழ் நியமிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத ஆட்கள் பகிரங்க வாழ்வில் அல்லது உயர்தொழிலில் தமக்கென்ற சிறந்த நிலையை ஏற்படுத்திக்கொண்ட கீர்த்தி வாய்ந்தவர்களும் நேர்மையுடையவர்களும் அத்துடன் ஏதேனும் அரசியற் கட்சியின் உறுப்பினரல்லாதவர்களுமான ஆட்கள் ஆதல் வேண்டும். இவர்களது பெயர் குறித்த நியமனம் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுத்தல் வேண்டும்.
பேரவையின் பதவிவழி அல்லாத உறுப்பினர்களின் பதவிக் காலம், நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து மூன்றாண்டுகளாகும்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போதிலும், பாராளுமன்ற சபாநாயகராகப் பதவிவகிப்பதற்காக புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் பேரவையின் ஓர் உறுப்பினராகச் சபாநாயகர் தொடர்ந்து பதவி வகிப்பார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போதிலும், பிரதம அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும், அத்தகைய கலைப்பைத் தொடர்ந்து நடைபெறும் பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், பிரதம அமைச்சராக நியமிக்கப்படும் அல்லது எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்படும் அத்தகைய காலம் வரை அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் அவ்வாறான பாராளுமன்ற உறுப்பினர் பேரவையின் உறுப்பினர்களாக நியமிக்கப்படும் அத்தகைய காலம் வரை, அத்தகைய பேரவையின் உறுப்பினர்களாகத் தொடர்ந்து பதவி வகித்தல் வேண்டும்.
பேரவையின் தற்போதைய உறுப்பினர்கள் பின்வருமாறு:-
பேரவையானது, அரசியலமைப்பினால் அல்லது வேறேதேனும் எழுத்திலான சட்டத்தினால் அதன் மீது சுமத்தப்படக்கூடியவாறான அல்லது அதற்குக் குறித்தொதுக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு கடமைகளைப் புரிதலும் பணிகளை நிறைவேற்றுதலும் வேண்டும்.
1. அரசியலமைப்பின் 41ஆ என்னும் உறுப்புரைக்கான அட்டவணையில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள ஆணைக்குழுக்களின் தவிசாளர்களினதும் மற்றும் உறுப்பினர்களினதும் நியமனம் தொடர்பில் சனாதிபதிக்கு நியமனங்களை விதந்துரைத்தல்.
41ஆ என்னும் உறுப்புரைக்கான அட்டவணையில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள்:
2. அரசியலமைப்பின் 41இ என்னும் உறுப்புரைக்கான அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட பதவிகளுக்கான நியமனங்களுக்கான சனாதிபதியின் விதந்துரைகளை அங்கீகரித்தல் / நிராகரித்தல்.
41இ என்னும் உறுப்புரைக்கான அட்டவணையில் குறித்துரைக்கப்பட்டுள்ள பதவிகள் பின்வருமாறு:
அரசியலமைப்பினால் அல்லது வேறேதேனும் எழுத்திலான சட்டத்தினால் சாட்டக்கூடிய அல்லது குறித்தொதுக்கக்கூடிய அத்தகைய பிற கடமைகளையும் தத்துவங்களையும் நிறைவேற்றுவதற்கு, அரசியலமைப்பின் 41எ (2) என்னும் உறுப்புரை பேரவைக்கு ஏற்பாடுசெய்கின்றது.
பின்வரும் சட்டங்கள், அவற்றில் குறிப்பீடுசெய்யப்பட்டவாறு அரசியலமைப்புப் பேரவையை அதன் கடமைகளைப் புரியுமாறு அழைக்கின்ற ஏற்பாடுகளை உள்ளடக்குகின்றன:
பேரவையானது, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கொரு தடவை, முற்போந்த மூன்று மாதக்காலப்பகுதியின் போதான அதன் செயற்பாடுகள் பற்றி ஓர் அறிக்கையை சனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பித்தல் வேண்டும்.
பேரவையானது, அதன் கடமைகளையும் பணிகளையும் நிறைவேற்றுவதற்கும், புரிவதற்குமான விதிகளை ஆக்குவதற்கு தத்துவமுடையதாதல் வேண்டும். அத்தகைய எல்லா விதிகளும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, அத்தகைய வெளியீட்டின் மூன்று மாதங்களுக்குள் பாராளுமன்றத்தின் முன்னர் இடப்படுதல் வேண்டும்.
41உ என்னும் உறுப்புரையின் கீழ், பேரவையானது குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவையும் கூடுதல் வேண்டும், அத்துடன் தேவையானவாறு அடிக்கடி கூடலாம்.
தவிசாளர் பேரவையின் எல்லாக் கூட்டங்களுக்கும் தலைமை தாங்குதல் வேண்டுமென்பதுடன், தவிசாளர் வருகைதராதிருப்பின், பிரதம அமைச்சரும், பிரதம அமைச்சர் வருகைதராதிருப்பின், எதிர்க்கட்சித் தலைவரும் பேரவையின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குதல் வேண்டும்.
பேரவையின் ஏதேனும் கூட்டத்திற்கான கூட்ட நடப்பெண் ஐந்து உறுப்பினர்களாதல் வேண்டும். பேரவையானது, அது செய்யத் தேவைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு விதப்புரையையும், அங்கீகாரத்தையும் அல்லது முடிபை ஏகமனதாகச் செய்வதற்கு முயற்சித்தல் வேண்டுமென்பதுடன், ஏகமனதாக முடிபொன்று இல்லாதவிடத்து, பேரவையினால் செய்யப்பட்ட விதப்புரை, அங்கீகாரம் அல்லது முடிபு எதுவும் அத்தகைய கூட்டத்தில் சமூகமாயிருக்கும் பேரவையின் உறுப்பினர்களில் ஐந்து உறுப்பினர்களுக்கு குறையாதோரினால் ஆதரவளிக்கப்பட்டாலொழிய, வலிதுடையதாகாது. தவிசாளர் அல்லது தலைமை தாங்கும் ஏனைய உறுப்பினர் மூலவாக்கொன்றை உடையவராதல் ஆகாது, ஆனால் பேரவையின் ஏதேனும் கூட்டத்தில் முடிபுக்கான ஏதேனும் பிரச்சினையின் மீது வாக்குகள் சமமாக இருக்கும் பட்சத்தில், தவிசாளர் அல்லது அத்தகைய கூட்டத்திற்கு தலைமை தாங்குகின்ற வேறு உறுப்பினர் அறுதியிடும் வாக்கொன்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
41ஆ அல்லது 41இ என்னும் உறுப்புரையின் கீழ் ஏதேனும் நியமனத்திற்குப் பொருத்தமான ஆட்களை விதந்துரைப்பது அல்லது அங்கீகரிப்பது தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை முறைகள் உட்பட, பேரவையின் கூட்டங்கள் மற்றும் அத்தகைய கூட்டங்களில் அலுவல்களைக் கொண்டுநடாத்துதல் தொடர்பான நடவடிக்கை முறை என்பன பேரவையினால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.
மூன்றாண்டு காலப்பகுதியொன்றுக்கென பேரவையினால் நியமிக்கப்பட வேண்டியவரான பேரவைக்கான செயலாளர் நாயகம் ஒருவர் இருத்தல் வேண்டும்.
பேரவையானது, அதனால் தீர்மானிக்கக்கூடியவாறான அத்தகைய நியதிகள் மற்றும் நிபந்தனைகள் மீது, அதனது பணிகளை நிறைவேற்றுவதற்காக அது அவசியமென கருதுகின்றவாறான அத்தகைய அலுவலர்களை நியமிக்கலாம்.
பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகமான திரு ஏ.எச்.எம்.எச்.எச்.எஸ். அபேரத்ன அவர்கள் அரசியலமைப்புப் பேரவைக்கான பதில் செயலாளர் நாயகமாகத் தற்பொழுது கடயைமாற்றுகின்றார்.
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, பா.உ.
தலைவர்
கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.
உறுப்பினர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
உறுப்பினர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
உறுப்பினர்
கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா, பா.உ.
உறுப்பினர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
உறுப்பினர்
கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.
உறுப்பினர்
கலாநிதி பிரதாப் இராமானுஜம்
உறுப்பினர்
வைத்தியகலாநிதி தில்குஷி அனுலா விஜேசுந்தர
உறுப்பினர்
கலாநிதி (திருமதி) தினேஷா சமரரத்ன
உறுப்பினர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks