පාර්ලිමේන්තු අත්පොත
ශ්රී ලංකාවේ මැතිවරණ ක්රමය
පාර්ලිමේන්තුවේ කටයුතු සිදුවන ආකාරය
පාර්ලිමේන්තුවේ කටයුතු
ප්රවේශ වී ඔබේ පාර්ලිමේන්තුව සමඟ සම්බන්ධ වන්න
ගරු අජිත් ගිහාන් මහතා,— ධීවර, ජලජ සහ සාගර සම්පත් අමාත්යතුමාගෙන් ඇසීමට,— (1)
(අ) (i) සී/ස සීනෝර් පදනම ස්ථාපිත කිරීමේ අරමුණ හා එහි කාර්යභාරය කවරේද;
(ii) එම පදනම විසින් පසුගිය පාලන කාලය තුළ ප්රමිතියෙන් යුතු දැල් හා බෝට්ටු නිෂ්පාදනය කිරීම, සාගර නිෂ්පාදන විකිණීම සහ අපනයනය කිරීම සිදු කර තිබේද;
(iii) එසේ නම්, එම කටයුතු සිදු කර ඇති ආකාරය කවරේද;
යන්න එතුමා මෙම සභාවට දන්වන්නෙහිද?
(ආ) (i) පසුගිය පාලන කාලය තුළ පදනමේ කාර්යභාරය බිඳ වැටී තිබේද;
(ii) එසේ නම්, ඒ සඳහා හේතු කවරේද;
(iii) පදනමේ මූල්ය වංචා සිදුවී තිබේද;
(iv) සී/ස සීනෝර් පදනම සංවර්ධනය කිරීම සඳහා වැඩපිළිවෙළක් තිබේද;
(v) එසේ නම්, එම වැඩපිළිවෙළ කවරේද;
යන්නත් එතුමා මෙම සභාවට දන්වන්නෙහිද?
(ඇ) නොඑසේ නම්, ඒ මන්ද?
අසන ලද දිනය
2026-06-26
අසන ලද්දේ
ගරු අජිත් ගිහාන් මහතා, පා.ම.
අමාත්යාංශය
ධීවර, ජලජ සහ සාගර සම්පත්
ව්යවස්ථාදායකය
ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ දසවැනි පාර්ලිමේන්තුව
සභාවාරය
1 වැනි සභාවාරය
(அ) (i) சீனோர் மன்றம் 1967ஆம் ஆண்டு உள்ளூர் மீனவர் சமூகத்தின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன், நோர்வே நாட்டைச் சேர்ந்த ஓர் அரசுசாரா அமைப்பின் ஆதரவுடன் இலாப நோக்கமற்ற நிறுவனமாக நிறுவப்பட்டது. விசேடமாக, பொது மக்களினதும் மீனவர்களினதும் நலன்களை மேம்படுத்தவே இது உருவாக்கப்பட்டது. பின்னர், 1987ஆம் ஆண்டின் 23ஆம் இலக்கம் கொண்ட, அரசுக் கூட்டுத்தாபனங்கள் அல்லது அரசுடைமையிலுள்ள வணிக நிறுவனங்களை பொது நிறுவனங்களாக மாற்றும் சட்டத்தின் பிரகாரம், 1990ஆம் ஆண்டு சனவரி மாதம் 17ஆம் திகதி, சீனோர் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் தொழில்களை பொறுப்பேற்றுத் தொடர்வதற்காக, சீனோர் மன்றம் ஒரு பொது வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய நிறுவனமாக இணைக்கப்பட்டது.
முக்கிய பணிகள்:
இவ்வாறு, சீனோர் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இதுநாள் வரைக்கும் மீனவர்களுடைய நலன்களை முன்னிறுத்தியே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
(ii) ஆம்.
(iii)
2019 முதல் 2025 வரையான காலப்பகுதியில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் இப்பொழுது இந்நிறுவனம் கணிசமான முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றது.
(ஆ) (i) ஆம்.
(ii) படகுகள் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை நேரடியாக வழங்குவதற்கான நடவடிக்கையில் இருந்து, அவற்றைக் கொள்முதல் செய்கின்ற நடவடிக்கையில் இருந்து, உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கின்ற நடவடிக்கையில் இருந்து, அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
(iii) சீ-னோர் உணவகத்தை ஒரு வெளித் தரப்பினருக்கு மாற்றியது தொடர்பான வழக்குகள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட அந்தச் சொத்து, அதன் தற்போதைய சந்தை மதிப்பைவிட கணிசமாகக் குறைந்த விலைக்கு ஒரு வெளித் தரப்பிரனருக்கு வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
(iv) ஆம்.
(v) புதிய அரசாங்கத்தின்கீழ், நிறுவனத்தின் நீண்டகாலப் பேண்தகு வளர்ச்சியையும் நிதி நிலைத்தன்மையையும் உறுதிசெய்யும் நோக்கில் ஒரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
சீ-னோர் நிறுவனம் என்பது கடந்த காலங்களில் முற்றுமுழுதாகச் செயலிழந்து போயிருந்த நிறுவனம், நட்டத்தில் இயங்கிய நிறுவனம், ஊழியர்களுக்குச் சம்பளத்தைக்கூட வழங்க முடியாத நிலையில் இருந்த நிறுவனம் என்றெல்லாம் கூறப்பட்டது. இன்றைக்கு இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு அனைத்துச் சேவைகளையும் செய்கின்ற அதேவேளை, ஊழியர்களின் EPF, ETF தொடர்பான பிரச்சினையையும் முற்றாகத் தீர்த்திருக்கின்றது. அதுமாத்திரமல்ல, இழுத்து மூடிவிட்டு தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கு இருந்த இந்த நிறுவனத்தை, இன்று அரசாங்கம் முற்றுமுழுதாக தனது கையிலெடுத்து, புதிய படகுகளை உற்பத்தி செய்வதற்கும், அந்தப் படகுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும், அதன்மூலமாக வெளிநாட்டு வருவாயைப் பெற்றுக்கொள்வதற்குமான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. அதுமாத்திரமல்ல, கடந்த 'தித்வா' புயலின்பொழுது, சீ-னோர் நிறுவனத்துக்கு மாத்திரம் நாங்கள் பெருந்தொகை பணத்தை ஒதுக்கீடு செய்தோம். அதாவது, 'தித்வா' புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வலைகள், வள்ளங்கள், படகுகள் என அனைத்தையும் சீரமைப்பதற்காக 11.4 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கின்றோம் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
(இ) ஏற்புடையதன்று.
පිළිතුරු දුන් දිනය
2026-06-26
විසින් පිළිතුරු දෙන ලදී
ගරු රාමලිංගම් චන්ද්රසේකර් මහතා, පා.ම.
පාර්ලිමේන්තු අත්පොත
ශ්රී ලංකාවේ මැතිවරණ ක්රමය
පාර්ලිමේන්තුවේ කටයුතු සිදුවන ආකාරය
පාර්ලිමේන්තුවේ කටයුතු
© ශ්රී ලංකා පාර්ලිමේන්තුව.
සියලු හිමිකම් ඇවිරිණි.
නිර්මාණය සහ සංවර්ධනය TekGeeks