E   |   සි   |  

 திகதி: 2026-06-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

1937/2026: வ/ப சீனோர் மன்றத்தைத் தாபித்தல்: நோக்கமும் பணிப்பொறுப்பும்

1937/2026
கௌரவ அஜித் கிஹான்,— கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) ​வரையறுக்கப்பட்ட சீனோர் மன்றத்தை தாபித்ததன் நோக்கமும் அதன் பணிப்பொறுப்புகளும் யாவையென்பதையும்;
(ii) கடந்த ஆட்சிக் காலத்தின்போது மேற்படி மன்றத்தால் தரம் வாய்ந்த வலைகள் மற்றும் படகுகளை உற்பத்தி செய்தல், கடல்சார் உற்பத்திகளை விற்பனை செய்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பதையும்;
(iii) ஆமெனில், அப்பணிகளை மேற்கொண்ட விதம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கடந்த ஆட்சிக் காலத்தில் மன்றத்தின் பணிப்பொறுப்புகள் வீழ்ச்சியடைந்தனவா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி மன்றத்தில் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பதையும்;
(iv) வரையறுக்கப்பட்ட சீனோர் மன்றத்தை அபிவிருத்திச் செய்வதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்;
(v) ஆமெனில், அவ்வேலைத்திட்டம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-06-26

கேட்டவர்

கௌரவ அஜித் கிஹான், பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-06-26

பதில் அளித்தார்

கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks