පාර්ලිමේන්තු අත්පොත
ශ්රී ලංකාවේ මැතිවරණ ක්රමය
පාර්ලිමේන්තුවේ කටයුතු සිදුවන ආකාරය
පාර්ලිමේන්තුවේ කටයුතු
ප්රවේශ වී ඔබේ පාර්ලිමේන්තුව සමඟ සම්බන්ධ වන්න
1935/2026
ගරු අජිත් ගිහාන් මහතා,— ධීවර, ජලජ සහ සාගර සම්පත් අමාත්යතුමාගෙන් ඇසීමට,— (1)
(අ) (i) ශ්රී ලංකා ජාතික ජලජීවි වගා සංවර්ධන අධිකාරිය රට තුළ තිබෙන මිරිදිය ධීවර, ඉස්සන් සහ විසිතුරු මසුන් කර්මාන්ත සඳහා වගකීම් දරන ආයතනය බව දන්නේද;
(ii) එසේ නම්, එම ආයතනය විසින් පසුගිය පාලන කාලයන් තුළ ඉහත ක්ෂේත්රවල අවශ්යතාවයන් අනුව පහසුකම් සලසාදී තිබේද;
(iii) අධිකාරිය සතු මත්ස්ය සහ ඉස්සන් අභිජනන මධ්යස්ථාන සංඛ්යාව කොපමණද;
(iv) මෙරට වගා කටයුතු සඳහා ප්රමාණවත් මත්ස්ය සහ ඉස්සන් පැටවුන් ලබාදීමට අධිකාරියට හැකියාව තිබේද;
යන්න එතුමා මෙම සභාවට දන්වන්නෙහිද?
(ආ) (i) අධිකාරිය තුළ පසුගිය කාලයේ මූල්ය වංචා සිදුවී තිබේද;
(ii) අධිකාරිය සතුව ජලජීවී වගා ක්ෂේත්රය සංවර්ධනය කිරීමේ වැඩපිළිවෙළක් තිබේද;
යන්නත් එතුමා මෙම සභාවට දන්වන්නෙහිද?
(ඇ) නොඑසේ නම්, ඒ මන්ද?
අසන ලද දිනය
2026-05-05
අසන ලද්දේ
ගරු අජිත් ගිහාන් මහතා, පා.ම.
අමාත්යාංශය
ධීවර, ජලජ සහ සාගර සම්පත්
ව්යවස්ථාදායකය
ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ දසවැනි පාර්ලිමේන්තුව
සභාවාරය
1 වැනි සභාවාරය
(அ) (i) ஆம்.
(ii) ஆம்.
(iii) · அலங்கார மீன் வளர்ப்பு நிலையங்கள் - 03
· நன்னீர் இறால் வளர்ப்பு நிலையங்கள் - 03
· உவர்நீர் இறால் வளர்ப்பு நிலையங்கள் - 01
· நன்னீர் மீன் வளர்ப்பு நிலையங்கள் - 10
(iv) · நன்னீர் மீன்வளர்ப்புக்குத் தேவையான மீன்குஞ்சுகளை வழங்கும் திறன் போது மானதாக இல்லை.
· நன்னீர் மீன்வளர்ப்புக்குத் தேவைப்படும் மொத்த மீன் விரலிக் குஞ்சுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 480 மில்லியன்.
· கடந்த ஓராண்டில் எங்கள் மீன்வளர்ப்பு நிலையங்கள், மீன்வள சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மீன்குஞ்சு வளர்ப்பு நிலையங்கள் மற்றும் தனியார் மீன்குஞ்சு வளர்ப்பு நிலையங்கள் மொத்தம் 67 மில்லியன் மீன் விரலிக் குஞ்சுகளை மட்டுமே வழங்கியுள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் மீன்வள சங்கங்களையும் தனியார் மீன்குஞ்சு வளர்ப்பு நிலையங்களையும் இனப் பெருக்க மையங்களாக மேம்படுத்தத் தேவையான தொழில்நுட்பங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒவ்வொரு பொருத்தமான நீர்த்தேக்கத் திலும் 1,000 சதுர மீற்றர் சீமெந்துத் தடாகம் மற்றும் 4,000 சதுர மீற்றர் சேற்றுத் தடாகம் அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. அத்தோடு இலங்கை நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு 3 பெரிய அளவிலான இனப் பெருக்க மையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
· அலங்கார மீன் வளர்ப்புக்கான உற்பத்தி யாளர்களுக்கு உயர் தரமான இனப் பெருக்க இருப்புகளை வழங்கவும் ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான சிறப்பு மீன் வகைகளை வழங்கவும் ரம்படகல்ல, கினிகத்தேன மற்றும் செவனபிட்டிய ஆகிய இடங்களில் 3 அலங்கார மீன் இனப்பெருக்க மையங்கள் செயற்பட்டு வருகின்றன. ரம்படகல்ல அலங்கார மீன் இனப் பெருக்க பயிற்சி மையமானது, இந்தத் துறையில் புதிதாக நுழைவோருக்கு அடிப்படை பயிற்சியை வழங்கவும் ஏற்கனவே ஈடுபட்டுள்ளவர் களுக்கு மேலதிக பயிற்சியை வழங்கவும் செயற்படுகின்றது.
· உவர் நீர் இறால் வளர்ப்புத் தொழிற் றுறைக்குத் தேவையான இறால் குஞ்சுகள் முழுமையாக தனியார் துறையால் வழங்கப்படுகின்றன.
· நன்னீர் இறால் வளர்ப்புத் தொழிற் றுறைக்குத் தேவையான போதுமான இறால் குஞ்சுகளை வழங்கும் திறன் அதிகாரசபைக்கு உள்ளது.
(ஆ) (i) ஆம்.
2017-2019 காலப்பகுதியில், தம்புள்ளை நீர் வேளாண்மை அபிவிருத்தி நிலையத்தின் வருமானம் வங்கியில் வைப்புச் செய்யப் படாததால் ரூபாய் 1,628,497.50 அளவிலான மோசடி இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகளின்போது குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட இரண்டு அதிகாரிகள் 54,250 ரூபாயை அதிகாரசபைக்குச் செலுத்தி யுள்ளனர். மேலும், குற்றவாளிகளாக கண்டறியப் பட்ட மற்றைய இரண்டு அதிகாரிகளிடமிருந்து மேற்குறித்த தொகையை மீட்டெடுக்க சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
(ii) ஆம்.
நன்னீர் மீன்பிடிக் கைத்தொழில்
அலங்கார மீன்பிடிக் கைத்தொழில்
இறால் வளர்ப்புக் கைத்தொழில்
(இ) பொருத்தமற்றது.
පිළිතුරු දුන් දිනය
2026-05-05
විසින් පිළිතුරු දෙන ලදී
ගරු රාමලිංගම් චන්ද්රසේකර් මහතා, පා.ම.
පාර්ලිමේන්තු අත්පොත
ශ්රී ලංකාවේ මැතිවරණ ක්රමය
පාර්ලිමේන්තුවේ කටයුතු සිදුවන ආකාරය
පාර්ලිමේන්තුවේ කටයුතු
© ශ්රී ලංකා පාර්ලිමේන්තුව.
සියලු හිමිකම් ඇවිරිණි.
නිර්මාණය සහ සංවර්ධනය TekGeeks