பார்க்க

E   |   සි   |  

2021 ஜூலை 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகளும் கணக்குகளும்.
(ii)    2020 ஆம் ஆண்டுகளுக்கான திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)   2020 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தின் செயற்பாட்டு மற்றும் கணக்கு அறிக்கை
(iv)    2020 ஆம் ஆண்டுகளுக்கான அநுராதபுர மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கையும் ஆண்டுக் கணக்கும்
(v)    2020 ஆம் ஆண்டுகளுக்கான மொனராகலை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi)    2020 ஆம் ஆண்டுகளுக்கான கண்டி மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை மற்றும் கணக்கு அறிக்கை
(vii)    2020 ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii)    2020 ஆம் ஆண்டுக்கான கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் தொழில்மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(ix)    2020 ஆம் ஆண்டுக்கான தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x)    2020 ஆம் ஆண்டுக்கான உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi)    2020 ஆம் ஆண்டுக்கான மகாவாலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புகள் பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xii)    2019 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(xiii)        2020 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiv)    2020 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xv)    20162017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான  அரச  அபிவிருத்தி நிருமாணக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள்
(xvi)    2018 ஆம் ஆண்டுக்கான புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் ஆண்டு அறிக்கை
(xvii)    2018 ஆம் ஆண்டுக்கான செலசினெ தொலைக்காட்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(xviii)    2020 ஆம் ஆண்டுக்கான மின்சக்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xix)    20172018 மற்றும் 2019 ஆம் ஆண்டுககளு்கான மாணிக்கம் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைகள்.
(xx)    2016/2017 மற்றும் 2017/2018 ஆம் ஆண்டுகளுக்கான பீசீசீ லங்கா லிமிடெட்டின் ஆண்டறிக்கைகள்.
(xxi)    2018 ஆம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் வருடாந்த அறிக்கை
(xxii)        2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xxiii)    2020 ஆம் ஆண்டுக்கான கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxiv)    2020 ஆம் ஆண்டுக்கான நிதி மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxv)    2020 ஆம் ஆண்டுக்கான பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ஜயந்த சமரவீர                                         -    இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ அநுர திசாநாயக்க                    
(iii)     கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன    -    இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பலின் விபத்து தொடர்பில் சுற்றுச்சூழல் மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

முத்துராஜவல சதுப்பு நிலத்தை நிரப்புவதால் எழும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பாக 2021.07.07 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு சுற்றாடல் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவைத் தாபிப்பதற்கும்; சந்தை நிறுவனங்களையும் பிணையங்கள் பற்றிய குறித்த சில பகிரங்கக் கொடைமுனைவுகளையும், சந்தை இடைத்தரகர்களையும் ஒழுங்குபடுத்துவதற்கும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்கும், வலுவுறுத்தல் வழிமுறைகளுக்காக ஏற்பாடு செய்வதற்கும்; சந்தை தொடர்பிலான துர்நடத்தையைக் கையாளுவதற்கும்; பிணையங்கள் சந்தை ஒழுங்குபடுத்துநர்களினால் எதிர்நோக்கப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கும்; 1987 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தை நீக்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்குமாக

“இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு”

எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.


அதனையடுத்து, 1207 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஜூலை 19ஆந் திகதி திங்கட்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks