பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டிற்கான அரசியலமைப்பின் உறுப்புரை 154 ண (4) பிரகாரம் நிதி ஆணைக்குழுவினால் மேதகு சனாதிபதி அவர்களுக்குச் சமர்ப்பிக்கும் பரிந்துரைகள்
(ii) 2013 ஆம் ஆண்டிற்கான தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம்
(iii) 2013 ஆம் ஆண்டிற்கான அமைச்சின் அரச தொழில்முயற்சிகள் திணைக்களம்
(iv) 2013 ஆம் ஆண்டிற்கான அமைச்சின் சட்ட அலுவல்கள் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(v) 2012 ஆம் ஆண்டிற்கான நீதிச் சேவை ஆணைக்குழுச் செயலகம்
(vi) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்
(vii) 2012 ஆம் ஆண்டுக்கான வாழ்க்கைத்தொழில்சார் தெழில்நுட்ப பல்ககைலக்கழகம்
(viii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை அச்சீட்டு நிறுவகம்
(ix) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமுர்த்தி அதிகார சபை
(x) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்
(xi) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
(xii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(xiii) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை சட்ட ஆணைக்குழுவின் நிகழ்ச்சித்திட்டம்
(xiv) 2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் நிர்வாக அறிக்கைகள்
(xv) திருத்தப்பட்டவாறான 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழ் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரினால் நிதி என்னும் விடயத்திற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரின் கலந்தாலோசனையுடன் ஆக்கப்பட்டு, 2014 யூன் 16 ஆம் திகதிய 1867/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அலுவல்கள்
(ii) கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
பற்றிய ஆலோசனைக் குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்)
வெளிநாட்டவருக்கும் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கும் மற்றும் வெளிநாட்டுப் பங்குகளை வைத்திருக்கும் குறித்த சில நிறுவனங்களுக்கும், இலங்கையிலுள்ள காணிகளின் பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகளை வலியுறுத்துவதற்கும் விலக்களிப்புகள் அளிக்கப்படவுள்ள சூழ்நிலைகளை குறித்துரைப்பதற்கும்; வெளிநாட்டவர்கள், வெளிநாட்டுக் கம்பனிகள் மற்றும் வெளிநாட்டுப் பங்குகளை வைத்திருக்கும் குறித்த சில நிறுவனங்களுக்கு காணிகளை குத்தகைக்கு விடுவதற்கான காணிக்குத்தகை வரி ஒன்றை விதிப்பதற்கும்; குறித்த சில அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு சலுகைகள் அளிப்பதற்கும் 1963ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க, நிதிச்சட்டத்தின் VIஆம் பாகத்தினை நீக்குவதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
கூட்டு நடப்பெண் இன்மையால் ஒத்திவைக்கப்பட்டது.
அதனையடுத்து, 1739 மணியளவில் பாராளுமன்றம் 2014 செப்டெம்பர் 10ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks