02

E   |   සි   |  

உட்செல்லல்

  • அனைத்து வருகை தருனர்களும் பாராளுமன்றக் கட்டடத்தை அணுக ஜயந்திபுர சோதனைச் சாவடி ஊடாக செல்ல வேண்டும். பார்வையாளர் கூடங்களுக்கு செல்லும் வருகை தருனர்கள் பொதுமக்கள் வரவேற்பு கருமபீடத்துக்கு பொதுமக்கள் நுழைவாயில் ஊடாக செல்ல வேண்டும்.
  • பின்வரும் இடங்களில் நீங்கள் ஒரு உடற் சோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள்:
    - ஜயந்திபுர நுழைவாயில்
    - பணியாளர்கள்/அரச அலுவலர்கள்/உறுப்பினர்கள் நுழைவாயில்
    - பார்வைக் கூடங்களுக்கான நுழைவாயில்
  • சந்தேகத்துக்கு இடமான ஒரு நிகழ்வின் போது, பாராளுமன்ற வளாகத்தினுள் எந்த இடத்திலும் நீங்கள் உடற் சோதனைக்கு உட்படுத்தப்படலாம்.
  • ஒரு பாராளுமன்ற உறுப்பினருடன் அல்லது பணியாளர் ஒருவருடன் வருகை தரும் நபர்கள் ஜயந்திபுர நுழைவாயில் ஊடாக உள்நுழைய வேண்டும். அவர்களின் அடையாளம் அங்கு உறுதிப்படுத்தப்படுவதுடன் அவர்கள் ஒரு உடற் சோதனைக்கும் அங்கு உட்படுத்தப்படுவார்கள்.
  • நீங்கள் பொதுமக்கள் வரவேற்பு கருமபீடத்தில் வருகையை பதிவு செய்ய வேண்டும்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks