பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகை தரும் நபர்களுக்கு பல வசதிகள் வழங்கப்படுகின்றன.
பாராளுமன்றத்துக்குள் எந்தவித உணவுகள் மற்றும் குடிபானங்களைக் கொண்டு வருவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் நுழையும் முன்னர் உங்களின் உண்வுண்ணல் மற்றும் குடிபானம் அருந்துதல் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுமாறு உங்களை நாம் வினயமுடன் கேடடுக்கொள்கின்றோம்.
உங்களின் பாராளுமன்ற வருகையின் போது உங்களின் நல்வாழ்வுக்காக பின்வரும் வசதிகள் வழங்கப்படுகின்றன:
ஜயந்திபுர உணவு விடுதி வருகை தருனர்களின் வாகனத் தரிப்பிடத்துக்கு அடுத்ததாக அமைந்துள்ளதுடன் அனைத்து வருகை தருனர்களையும் அது அன்புடன் வரவேற்கின்றது. இந்த உணவு விடுதி காலையுணவு மற்றும் மதிய உணவுத் தெரிவுகளுடன் சூடான மற்றும் குளிரான குடிபானங்களையும் வழங்குகின்றது. மேலதிகமாக அங்குள்ள பேக்கரி சுவையான பேஸ்ட்ரிகள் மற்றும் கேக் வகைகள வழங்குகின்றது.
திறந்திருக்கும் நேரம்: காலை 8.30 தொடக்கம் இரவு 8:30 வரை
பொதுமக்கள் வரவேற்பு கருமபீடத்துக்கு அடுத்ததாக அமைந்துள்ள பொதுமக்கள் உணவு விடுதியில் உணவு மற்றும் குடிபானங்களை கொளவனவு செய்ய மற்றும் உட்கொள்ள நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள்.
திறந்திருக்கும் நேரம்: காலை 8.30 தொடக்கம் இரவு 8:30 வரை
உங்களின் வசதிக்காக, நினைவுச்சின்னக் கடைகள் பாராளுமன்றதக் கட்டடத்தின் பொதுமக்கள் நுழைவாயிலில், உணவு விடுதிக்கு அருகாமையில், விளையாட்டு மைதானத்துக்கு அப்பால், பாராளுமன்றத்தின் முன் பக்கமாக அமைந்துள்ளன. உங்கள் வருகையின் பின்னர் வெளியேறிச் செல்லும் வேளை பல பரிசுப் பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை உங்களால் அங்கு கொள்வனவு செய்ய முடியும். மேலும், சட்டமூலங்கள் பற்றிய மீயுயர் நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் இலங்கை பாராளுமன்றம் தொடர்பான புத்தகங்கள் உள்ளடங்கலாக பாராளுமன்றம் பற்றிய ஆவணங்களும் அங்கு விற்பனைக்கு உள்ளது.
நினைவு பரிசு கடை
ஜயந்திபுர பாராளுமன்ற நினைவுச்சின்னக் கடை – அமைவிடம், பாராளுமன்ற வாகனத் தரிப்பிடம்
திங்கள் தொடக்கம் வெள்ளி காலை 8.00 தொடக்கம் மாலை 4.00 மணி வரை
சனிக்கிழமை காலை 8.00 தொடக்கம் மதியம் 1.00 மணி வரை
ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்களில் நினைவுச்சின்னக் கடை மூடப்பட்டிருக்கும் என்பதை கருத்தில் கொள்ளவும்.
பாராளுமன்ற நினைவுச் சின்னக்கடை
திங்கள் தொடக்கம் வெள்ளி காலை 8.00 தொடக்கம் மாலை 4.00 மணி வரை
வார இறுதி மற்றும் பொது விடுமுறை தினங்களில் நினைவுச்சின்னக் கடை மூடப்பட்டிருக்கும் என்பதை கருத்தில் கொள்ளவும்.
விசாரணைகளுக்கு, தொடர்பு கொள்ளவும்:
விமன்சா விதுங்கனி
தொலைபேசி: +94 112 777 554
+94 112 777 100 Ex. 5424
மின்னஞ்சல்: vimansa_v@parliament.lk
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks