01

E   |   සි   |  

2026-01-22

செய்தி வகைகள் : செய்திகள் 

இலங்கை - பெல்ஜியம் பாராளுமன்ற நட்புறச் சங்கத்தின் தலைவராக கௌரவ அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை - பெல்ஜியம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். 

இந்தச் சங்கத்தின் மீளஸ்தாபிப்பதற்கான கூட்டம் அண்மையில் (ஜன. 21) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பெல்ஜியத்தின் இலங்கைக்கான ஹொனொரரி கொன்சல் கோன்ராட் பிரிஞ்சியர்ஸ் (Mr. Koenraad Pringiers) கௌரவ விருந்தினராக இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) சாகரிகா அதாவுத நட்புறவுச் சங்கத்தின் சங்கத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பத்மசிறி பண்டார மற்றும் ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோர் இணைப் பொருளாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது, இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவை இரு தரப்பினரும் சுட்டிக்காட்டினர். அத்துடன், பாராளுமன்ற ஈடுபாடு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை வலியுறுத்தி, பொதுவான நலன் சார்ந்த பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வது குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இக்கூட்டத்திற்கு முன்னர், பெல்ஜியத்தின் ஹொனொரரி கொன்சல் கோன்ராட் பிரிஞ்சியர்ஸ், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்ததுடன், இதன்போது இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2026-01-26

தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம்

தொழில்முயற்சியாளரின் பிணையில்லாமல் கடன் பெறும் முறைமை மற்றும் தகவல்களைச் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு முறையாகத் தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்தித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்று 2026.01.20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.பொருளாதார அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் முன்னெடுப்பில் நடத்தப்பட்டது.நிதி அணுகலுக்கான பிரதான தடைகளாக உள்ள அதிக வட்டி வீதங்கள் மற்றும் பிணையில்லாமை ஆகியவற்றுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள தீர்வுகள் குறித்து அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். அதிக வட்டி வீதங்களுக்கான தீர்வாக அரசாங்க அல்லது அபிவிருத்திப் பங்காளிகளின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் மறுநிதியளிப்புக் கடன் திட்டங்களை (Re-financing loans) அறிமுகப்படுத்துதல் மற்றும் வட்டி மானியம் (Interests subsidy loans) வழங்கப்படும் கடன் திட்டங்களுக்காக 2026 ஆம் ஆண்டிற்காக 95,686 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கமைய, தித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக நடவடிக்கைகளை மீண்டும் விரைவாக ஆரம்பிப்பதற்குத் தேவையான தொழிற்படு மூலதனக் கடன்களை (Working capital loans) வழங்கும் பணிகள் கடந்த டிசம்பர் 16 முதல் 3 அரச வங்கிகள் மூலம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர். தனியார் வங்கிகள் உட்பட மேலும் 13 வங்கிகள் தற்போது இந்தக் கடன்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் 0 சதவீத வட்டியில் வங்கிகளுக்கு நிதி வழங்கப்படுவதாகவும், வங்கிகள் மூலம் 3 சதவீத வட்டி வீதத்தில் 25 மில்லியன் ரூபா வரை கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அதன்படி 2026 ஆம் ஆண்டிற்காக 10,000 மில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோன்று நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மீண்டும் வலுப்படுத்துவதற்கான கடன் வசதியின் கீழ் 25 மில்லியன் ரூபா வரை 5 சதவீத வட்டி வீதத்தில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கடன்களைப் பெற முடியும் என்றும், 2026 ஆம் ஆண்டில் அதற்காக 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும் கடன் பெறும் போது தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் பிணைகளைச் சமர்ப்பிப்பதில் உள்ள சிக்கலுக்குத் தீர்வாக நிறுவப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட கடன் உத்தரவாத நிறுவனம் அந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் விதம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. தற்போது சம்பந்தப்பட்ட கடன் தொகையில் 67 சதவீதத்திற்குப் பிணைப் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு 80 சதவீதப் பிணைப் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். ஒரு தொழில்முயற்சியாளர் பெறும் கடன் தொகையில் 67 சதவீதத்திற்கு மட்டுமே பிணை கிடைப்பதால், எஞ்சிய 33 சதவீதத்திற்குப் பிணை இல்லாதது நடைமுறை ரீதியாக ஒரு சிக்கலாக இருப்பதால், அது குறித்து அவதானம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.அதேபோன்று இந்தக் கடன்களைப் பெறும்போதும் பிணைகள் குறித்தும் சரியான முறைமை மற்றும் தகவல்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் இன்னும் முறையாகச் சென்றடையவில்லை என்பது ஒரு சிக்கல் என்றும், அதைச் சரியாகத் தெரியப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.விவசாயச் சமூகத்தின் வாழ்வாதார நிலைமையை மேம்படுத்தவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கவும் கடன் வசதிகளை வழங்குவது பெப்ரவரி இரண்டாவது வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதன் கீழ் 50 இலட்சம் ரூபா கடன் தொகை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படவுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் அதற்காக 800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.இதற்கு மேலதிகமாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் மற்றும் வட்டி மானியம் வழங்கப்படும் ஏனைய கடன் திட்டங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டதுடன், அவை தொடர்பாக உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட சிக்கல்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இந்த வேலைத்திட்டத்தில் அமைச்சர்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதி அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். அதேபோன்று திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஏ.கே. செனவிரத்ன, அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மஞ்சுள ஹெட்டியாராச்சி, தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷ மற்றும் அதிகாரிகள் குழுவொன்றும், பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா உட்பட அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-01-26

பிரியாவிடை பெற்றுச்செல்லும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மரியாதையின் நிமித்தம் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்

சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பஹீம் உல் அஜீஸ் அவர்கள், இலங்கை பாராளுமன்ற கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை மரியாதையின் நிமித்தம் அண்மையில் (ஜன. 22) சந்தித்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.இந்தச் சந்திப்பின் போது, தனது பதவிக்காலத்தில் அவருக்கும் அவரது தூதுக்குழுவினருக்கும் சபாநாயகர் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் அன்பான விருந்தோம்பலுக்காக உயர்ஸ்தானிகர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்ததுடன், தனது பதவிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து சபாநாயகரிடம் விளக்கினார். மக்களின் நலனுக்காகவும், அண்மைய பொருளாதார சவால்களிலிருந்து மீள்வதற்காகவும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் பாராட்டியதுடன், எதிர்காலத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான பாகிஸ்தானின் உறுதிப்பாட்டை உயர்ஸ்தானிகர் இதன்போது மீண்டும் வலியுறுத்தினார்.இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட முயற்சிகளை கௌரவ சபாநாயகர் பாராட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை நினைவு கூர்ந்த கௌரவ சபாநாயகர், தேவையான தருணங்களில் குறிப்பாக சர்வதேச அரங்குகளில் மற்றும் 30 ஆண்டு கால யுத்தத்தின் போது பாகிஸ்தான் வழங்கிய ஆதரவிற்காக இலங்கையின் நன்றியைத் தெரிவித்தார்.அத்துடன், புலமைப்பரிசில் திட்டங்கள் ஊடாக உயர்கல்வி, விவசாய ஒத்துழைப்பு மற்றும் கால்நடைத் தொழில் தொடர்பான தொழில்நுட்பப் பகிர்வு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


2026-01-23

அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன

பாராளுமன்றம் பெப்ரவரி 3, 5  மற்றும்  6ஆம் திகதிகளில் கூடும்பெப்ரவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஜன. 23) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இதற்கமைய, பெப்ரவரி 3, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவுள்ளது. இதற்கமைய பாராளுமன்றம் கூடும் மூன்று தினங்களும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.2026 பெப்ரவரி 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தின் கீழ் 2396/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இதனையடுத்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டு வரப்படும் சபை ஒத்திவைப்பின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 பெப்ரவரி 5ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்றத்தில் ஏற்கனவே முதலாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கை நிலையான சொத்து உயர்தொழிலர்கள் உரிமமளித்தல் சட்டமூலம் இரண்டாவது மதிப்பிட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அத்துடன், கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மற்றும் கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தப்படாப் பொதுக் காவுநர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் அரசியலமைப்பின் 121ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படாவிடின் இவை தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதமும் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 பெப்ரவரி 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கீழ் காணப்படும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் தனியார் உறுப்பினர் பிரேரணைகள்கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சிதேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவுப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்பினை வழங்குதல்கௌரவ சமிந்த விஜேசிறிஇலங்கை வெளிநாட்டு சேவைக்காக நியமனங்கள் வழங்கப்படுவதை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்கௌரவ ரவி கருணாநாயக்கஇலங்கையிலுள்ள விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபடச் செய்தல்கௌரவ லால் பிரேமநாத்அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்கௌரவ ரோஹண பண்டாரபேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்கௌரவ நலின் பண்டார ஜயமஹபெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல்கௌரவ ரவீந்திர பண்டாரபைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல்இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, அரசியலமைப்புப் பேரவையில் பாராளுமன்ற உறுப்பினர்கள்அல்லாத உறுப்பினர்கள் மூவரின் பதவிக்காலம் முடிவடைந்திருப்பதால், அரசியலமைப்பின் 41 அ (4) மற்றும் (5) யாப்புகளுக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூவரின் பெயர்களடங்கிய பிரேரணைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சபையின் விசேட அனுமதியுடன் இன்றையதினமே (23) பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.


2026-01-23

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது

அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படவேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூன்று உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய பிரேரணைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம்பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் இன்று (ஜன. 23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான இந்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2025 நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் அவர்களினால் 2025 டிசம்பர் 03 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.மேலும், அரசியலமைப்புப் பேரவையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூன்று உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி முடிவடைந்துள்ளதால், அரசியலமைப்பின் 41 அ (4) மற்றும் (5) ஆகிய யாப்புக்களுக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூன்று உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய பிரேரணைக்கு இன்று பாராளுமன்றத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய;01. ஒஸ்டின் பிரணாந்து 02. பேராசிரியர் வசந்தா செனெவிரத்ன 03. ரஞ்சித் ஆரியரத்ன ஆகிய மூன்று நியமனங்களுக்கும் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அங்கீகரிக்கப்பட்ட மூன்று நியமனங்களும் கௌரவ சபாநாயகரினால் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks