பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
கௌரவ ஜயந்த கெடகொட அவர்களின் இராஜினமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ பெசில் ரோஹன ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான அமைச்சரவை அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுகளுக்கான வவுனியா மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2020 ஆம் ஆண்டுகளுக்கான நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(iv) 2020 ஆம் ஆண்டுகளுக்கான குருணாகல் மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டுகளுக்கான மாத்தறை மாவட்ட செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2020 ஆம் ஆண்டுகளுக்கான பதுளை மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) 2020 ஆம் ஆண்டுகளுக்கான மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்கு அறிக்கை
(viii) 2020 ஆம் ஆண்டுகளுக்கான பொலன்னறுவை மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(ix) 2020 ஆம் ஆண்டுகளுக்கான மாத்தளை மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(x) 2020 ஆம் ஆண்டுகளுக்கான காலி மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xi) 2020 ஆம் ஆண்டுகளுக்கான அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்கறிக்கையும்
(xii) 2020 ஆம் ஆண்டுகளுக்கான மன்னார் மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiii) 2020 ஆம் ஆண்டுகளுக்கான ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xiv) 2020 ஆம் ஆண்டுகளுக்கான யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(xv) 2020 ஆம் ஆண்டுகளுக்கான புத்தளம் மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(xvi) 2020 ஆம் ஆண்டுகளுக்கான கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை மற்றும் கணக்கறிக்கை
(xvii) 2020 ஆம் ஆண்டுகளுக்கான முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xviii) 2020 ஆம் ஆண்டுகளுக்கான கேகாலை மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(xix) 2020 ஆம் ஆண்டுகளுக்கான கொழும்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை மற்றும் கணக்கறிக்கை
(xx) 2020 ஆம் ஆண்டுகளுக்கான களுத்துறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(xxi) 2020 ஆம் ஆண்டுகளுக்கான கிராமிய வயல்கள் மற்றும் அண்மித்த குளங்கள், நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxii) 2020 ஆம் ஆண்டுக்கான அறநெறிப் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் பிக்குமார் கல்வி இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxiii) 2020 ஆம் ஆண்டுக்கான நீர் வழங்கல் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxiv) 2012, 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை அரசாங்க பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் விமல் வீரவங்ச அவர்களுக்கு பதிலாக கௌரவ லொஹான் ரத்வத்தே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பிரசன்ன ரணவீர - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ எஸ். பீ. திசாநாயக்க - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ அநுர திசாநாயக்க
சுற்றுலா துறையின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்
மேற்சொன்ன வினாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
லெபனான் பொருளாதார நெருக்கடியால் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு தொழில் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள் பதிலளித்தார்.
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
ஜெனரல் சோ் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலம் தொடர்பான தீர்மானம்
ஜெனரல் சோ் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலம் எனும் சட்டமூலத்தின் குறித்த சில வாசகங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் 9 ஆம் அட்டவணையின் நிரல்-III இன் (ஒருங்கிணை நிரல்) விடயங்களுடன் தொடர்புபடுவதால் மாகாண சபைகளின் கருத்துக்களைப் பெறுமாறு சட்டத்துறைத் தலைமை அதிபதி அவர்களால் கருத்துரைக்கப்பட்டுள்ளதாலும், தற்போது அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட்டுள்ளதாலும், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 51(1) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் இந்தச் சட்டமூலமானது பாராளுமன்றத்தினால் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்குமாக.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றிற்காக ஒத்திவைக்கப்பட்டன:-
(i) ஜெனரல் சோ் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(ii) குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த
(ii) கௌரவ சமிந்த விஜேசிறி
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி வீட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் முழுமையாக விடுவிக்கப்படாமை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1740 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஜூலை 09ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks