01

E   |   සි   |  

 திகதி: 2017-10-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

1852/2017: கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்கள்: ஒப்பந்த அடிப்படையிலான ஆட்சேர்ப்புகள்

1852/ '17

கௌரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவினால் முறைசார்ந்த ஆட்சேர்ப்பு நடைமுறையொன்று அமுல்படுத்தப்படுகின்றதென்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

(ii) புதிதாக கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்பட்டு பெறுபேறுகளை வெளியிடுவதற்கு அண்மித்திருந்த நிலையில், ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;

(iii) ஆமெனில், அதன் மூலம், போட்டிப் பரீட்சைக்கு தோற்றியிருந்த விண்ணப்பதாரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகின்றதென்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) புதிய ஆட்சேர்ப்புகள் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுமாயின், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும் அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-17

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-10-17

பதில் அளித்தார்

கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks