01

E   |   සි   |  

 திகதி: 2017-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

1746/2017: பாராளுமன்றத்தில் வரவு-செலவுத்திட்ட அலுவலகத்தைத் தாபித்தல்: விபரம்

1746/ '17

கெளரவ வாசுதேவ நாணாயக்கார,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட அலுவலகம் ஒன்றைப் பேணிவருதவற்காக எடுக்கப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதையும்;

(ii) ஏற்படக்கூடிய வரவுசெலவுத்திட்டக் குறைதல்கள் தொடர்பாக கேட்டறிந்து கொள்வதற்கான நிறுவனங்கள் யாவை என்பதையும்;

(iii) வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வாக்குறுதிகளின் செயற்படு தன்மையின் முன்னேற்றம் தொடர்பாக பாராளுமன்றத்தினால் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும் என்பதையும்;

(iv) 2017 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் நலன்புரி தொடர்பான பிரேரணைகள் நிறைவேற்றப்படும் நாளேட்டுக் குறிப்பொன்றை (கலண்டர்) பெற்றுத்தருவாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) 2015 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிறைவேற்றப்படாத முன்மொழிவுகள் யாவை என்பதையும்;

(ii) அந்த முன்மொழிவுகள் நிறைவேற்றப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-20

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-10-20

பதில் அளித்தார்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks