01

E   |   සි   |  

 திகதி: 2017-07-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

1679/2017: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை: வாட்டுகள் பற்றாக்குறை

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள வாட்டுக்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கைகளையும்;

(ii) ஒவ்வொரு வாட்டிலும் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையையும்;

(iii) அனைத்து வைத்திய நிபுணர்களின் பெயர்களையும் அவர்களின் மருத்துவத் துறைகளையும்;

(iv) இவ் வைத்திய நிபுணர்கள் பொறுப்பாக உள்ள வாட்டுக்களின் விபரங்களையும்;

அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

(ஆ) (i) வைத்திய நிபுணர்களின் பொறுப்பில் வழங்குவதற்கு வாட்டுக்கள் தட்டுப்பாடாக உள்ளன என்பதையும்;

(ii) இடவசதி மற்றும் படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் சாதாரண நோயாளிகளும், தீவிர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பாரதூரமான நோயுடன் கூடிய நோயாளிகளும் சில வாட்டுக்களில் தரைகளிலும் வராந்தாக்களிலும் தங்கியுள்ளதென்பதையும்;

(iii) மேலதிக வாட்டுகளின் நிர்மாணத்திற்காக வளாகத்தில் காணி கிடைக்கக் கூடியதாக உள்ளது என்பதையும்;

(iv) கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கான ஒரு போதனா வைத்தியசாலையாக இது உள்ளது என்பதையும்

அவர் அறிவாரா?

(இ) (i) அவர் அதற்கு முன்னுரிமை அளித்து, அவசரமாகத் தேவைப்படும் வாட்டுகளின் நிர்மாணத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வரா என்பதையும்;

(ii) அவ்வாறாயின் எப்போது என்பதையும்

அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

(ஈ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-06

கேட்டவர்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-07-06

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks