01

E   |   සි   |  

 திகதி: 2017-08-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1636/2017: Lanka Coal Company Ltd. - Employees and Director Board

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) கம்பனி (Lanka Coal Company (Pvt.) Ltd.) தாபிக்கப்பட்டதன் நோக்கம் யாதென்பதையும்,

(ii) மேற்படி கம்பனியில் தற்போது பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) மேற்படி கம்பனியின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் யாவரென்பதையும்;

(iv) 2016 யூலை மாதத்திற்கு ஏற்புடையதாக மேற்படி கம்பனியின் தலைவர், பணிப்பாளர் சபை மற்றும் ஊழியர்கள் பெற்றுக்கொண்டுள்ள சம்பளம் மற்றும் அனைத்துக் கொடுப்பனவுகளும் யாதென்பதையும்;

(v) மேற்படி கம்பனி தாபிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா என்பதையும்;

(vi) நிலக்கரி கொள்வனவு செய்தல் போன்ற பாரிய தொழில்முயற்சி நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்கு மேற்படி கம்பனிக்கு ஆற்றல் உள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-24

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks