பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
5656/ ’14
கௌரவ சிவசக்தி ஆனந்தன்,— மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமை மற்றும் கிறித்தவ மத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பம்பலப்பிட்டி, மெஜஸ்ரிக் சிட்டி, மூன்றாம் மாடியில், இலக்கம் 3 – 26 மற்றும் 27 ஆம் இலக்கங்களில் அமைந்துள்ள ‘பனமா டிரேடர்ஸ்’ வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான ராமசாமி பிரபாகரன் என்பவர் 28 மாதகாலமாக கைது செய்யப்பட்டிருந்த நிலையில் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்ட ஒருவராவாரா என்பதையும்;
(ii) விடுதலை பெற்ற பின்னர் இவர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் அரச புலனாய்வுப் பிரிவில் சேவையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தன ஆகியோருக்கு எதிராக மனித உரிமை மீறல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார் என்பதையும்;
(iii) இது சம்பந்தமான வழக்கு விசாரணை 2012 பெப்ருவரி மாதம் 13 ஆம் திகதி நடாத்தப்படவிருந்தது என்பதையும்;
(iv) 2012 பெப்ருவரி 11 ஆம் திகதி பி.ப. 3.30 மணியளவில் வெள்ளை வேன் ஒன்றில் வந்த சிலர் வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து இவரை கடத்திச் சென்றுள்ளார்கள் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) 2012 பெப்ருவரி 11 ஆம் திகதி காணாமல்போன ராமசாமி பிரபாகரன் தற்போது இருக்கும் இடம் யாது என்பதையும்;
(ii) இவரின் நிலைமை என்ன என்பதையும்;
(iii) மேற்படி கடத்தலுடன் தொடர்புடையவர்கள் அல்லது சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் யாவர் என்பதையும்;
(iv) இவர்களின் பெயர்களை வெளியிட முடியாதிருப்பின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-02-06
கேட்டவர்
கௌரவ அண்ணாமலை நடேசு சிவசக்தி, பா.உ.
அமைச்சு
., மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமை மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) ඔව්. රාමසාමි ප්රභාකරන් යන අය 2009 දැයට කිරුළ ප්රදර්ශන භූමියට මරාගෙන මැරෙන බෝම්බකරුවෙකු රැගෙන ඒමට අධාර අනුබල දීම සම්බන්ධයෙන් 2009.05.22 වන දින අත් අඩංගුවට ගෙන ත්රස්තවාදය වැළැක්වීමේ පනත යටතේ රඳවා ගැනීමේ නියෝග මත රඳවා ගෙන අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව විසින් වැඩිදුර විමර්ශන සිදු කර ඇති අතර, නීතිපති උපදෙස් මත ගල්කිස්ස මහෙස්ත්රාත් අධිකරණය මඟින් 2011.09.16 දිනැතිව ඔහු නිදහස් කර ඇත.
(ii) නැත. ශ්රේෂ්ඨාධිකරණයේ අයදුම් පත් අංක 963/2009 යටතේ ඔහුගේ මූලික අයිතිවාසිකම් කඩවීම සම්බන්ධයෙන් නඩුවක් ගොනු කර තිබූ බවට රාමසාන් ප්රභාකරන් යන අයගේ බිරිඳ වන ශිරෝමනී නාරායනන් විසින් වැල්ලවත්ත පොලිස් ස්ථානයට කර ඇති පැමිණිල්ලේ සඳහන්ව ඇත.
(iii) එම නඩු විභාගය 2012.02.13 දිනට පැවැත්වීමට නියමිතව තිබී ඇති බවට ඉහත පැමිණිලිකාරිය විසින් වැල්ලවත්ත පොලිස් ස්ථානයට කර ඇති පැමිණිල්ලේ සඳහන්ව ඇත.
(iv) වැල්ලවත්ත, කැනල් බෑන්ක් පාර, අංක 153/01/01 දරන තම නිවස ඉදිරිපිටදී 2012.02.11 දින සවස 03.30ට පමණ සුදු පැහැති වෑන් රථයකින් පැමිණි ආයුධ සන්නද්ධ පිරිසක් විසින් පැහැර ගෙන ගිය බවට ඔහුගේ බිරිඳ වන ශිරෝමනී නාරායනන් නැමැත්තිය විසින් වැල්ලවත්ත පොලිස් ස්ථානය වෙත බල අපරාධ ලේඛන අංක 36/2012 යටතේ 2012.02.11 වන දින කර ඇති පැමිණිල්ලේ සඳහන් කර ඇත.
(ආ) (i) මෙතෙක් සිදු කර ඇති විමර්ශනවලදී අනාවරණය වී නොමැත.
(ii) මෙතෙක් සිදු කර ඇති විමර්ශනවලදී අනාවරණය වී නොමැත.
(iii) විමර්ශනයේදී සැකකරුවන් පිළිබඳව මෙතෙක් අනාවරණය වී නොමැත.
(iv) විමර්ශනයේදී සැකකරුවන් පිළිබඳව මෙතෙක් අනාවරණය වී නොමැත.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2015-02-06
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks