01

E   |   සි   |  

 திகதி: 2013-10-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

3360/2013: பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழான நிறுவனங்கள்: வாகனங்கள்

3360/ ’12

கெளரவ பி. ஹரிசன்,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

           (ii)    மேற்படி ஒவ்வொரு நிறுவனத்தின் கீழ் உள்ள அரசாங்க வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி நிறுவனங்களில் அரசாங்க வாகனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் தரங்கள் யாவை என்பதையும்

(iv) மேற்படி உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) மேற்படி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் உள்ள வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி வாகனங்களுக்கான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும் முறை யாதென்பதையும்;

(iii) மேற்படி வாகனங்களுக்காக வருடாந்தம் செலுத்தப்படும் மொத்தப் பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(iv) வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்களை பயன்படுத்தும் உத்தியோகத்தர்கள் யாவரென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) (i) மேற்படி அமைச்சின் கீழ் உள்ள அரசாங்க வாகனங்கள், வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் சொந்த வாகனங்களை வேறுபடுத்தி இனம் காண்பதற்கான முறையியலொன்று உள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனின், இது தொடர்பில் விளக்கமளிப்பாரா என்பதையும்;

(iii) அமைச்சுக்கும் அதன் கீழுள்ள நிறுவனங்களுக்கும் சொந்தமான அரசாங்க வாகனங்களில் அரச இலச்சினையுடன் குறித்த நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-10-24

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු විජය දහනායක මහතා (රාජ්‍ය පරිපාලන හා ස්වදේශ කටයුතු නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு விஜய தஹநாயக்க- பொது நிருவாக, உள்நாட்ட லுவல்கள் பிரதி அமைச்சர்)

(The Hon. Wijaya Dahanayake - Deputy Minister of Public Administration and Home Affairs)

ගරු කථානායකතුමනි, රාජ්‍ය පරිපාලන හා ස්වදේශ කටයුතු අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

 

(අ)          (i)      361යි.

              (ii)      1,147යි.

             (iii)      ශ්‍රී ලංකා පරිපාලන සේවයේ විශේෂ ශ්‍රේණිය සහ I ශ්‍රේණිය. ගරු මන්ත්‍රීතුමනි, මීට අමතරව ප්‍රාදේශීය ලේකම්වරුන් ලෙස සේවය කරන ශ්‍රී ලංකා පරිපාලන සේවයේ II ශ්‍රේණිය සහ III ශ්‍රේණියේ නිලධාරිනුත් අයිති වෙනවා, ප්‍රාදේශීය ලේකම්වරුන් හැටියට.

ශ්‍රී ලංකා ගණකාධිකාරී සේවය I ශ්‍රේණිය;

ශ්‍රී ලංකා කෘෂිකාර්මික සේවය I ශ්‍රේණිය;

ශ්‍රී ලංකා ඉංජිනේරු සේවය I ශ්‍රේණිය;

රෙජිස්ට්‍රාර් ජනරාල් සේවය

             (iv) 383යි. අදාළ ආයතනවල සෙසු වාහන ඒ සම්බන්ධයෙන් බලය පවරන ලද ප්‍රවාහන නිලධාරින්ගේ  අධීක්ෂණය යටතේ ඇත.

 

(ආ)         (i) කුලී පදනම මත වාහන ලබා ගෙන නොමැත.

             (ii) අදාළ නොවේ.

             (iii) අදාළ නොවේ.

             (iv) අදාළ නොවේ.

 

(ඇ)         (i)      ඔව්.

              (ii)      මෙම අමාත්‍යාංශයේ හෝ ඒ යටතේ ඇති ආයතනවල කුලී පදනම මත ලබා ගත් වාහන නොමැත. එබැවින් චක්‍රලේඛ අංක 26/92 සහ 26/92(1) ප්‍රකාරව අමාත්‍යාංශයේ සහ අදාළ ආයතනයන්හි වාහන සඳහා රාජ්‍ය ලාංඡනය සමඟ අදාළ ආයතනයේ නම යොදා ඇත. ආයතනයේ නම සහ රාජ්‍ය ලාංඡනය යොදා නොමැති ආයතන කිහිපයකට එම චක්‍රලේඛ අනුව කටයුතු කරන ලෙස දන්වා ඇත. නිලධාරින්ට අනුයුක්ත වාහන සංචිත වාහන හා නිලධාරින් විසින් ‍භාවිතා කරන පෞද්ගලික වාහන වෙන වෙනම ලේඛන ගත කර ඇත.  

              (iii)    ඔව්.

              (iv)    අදාළ නොවේ.

(ඈ) අදාළ නොවේ.

 

பதில் தேதி

2013-10-24

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ விஜய தஹநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks