E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1467/ 2025 - கௌரவ சானக மாதுகொட, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1467/2025
      கௌரவ சானக மாதுகொட,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) நெல் தவிர்ந்த ஏனைய களப்பயிர்களின் உற்பத்தி மற்றும் விளைதிறனை அளவிடப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் யாவையென்பதையும்;
      (ii) தானிய வகைகள் மற்றும் கிழங்குப் பயிர் வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவென்பதையும்;
      (iii) மேற்படி நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, எந்தெந்த தானிய வகைகளின் மற்றும் கிழங்குப் பயிர் வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது என்பதையும்;
      (iv) 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025, 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு தானிய வகை மற்றும் கிழங்குப் பயிர் வகையையும் உற்பத்திச் செய்வதற்கு எதிர்பார்க்கும் அளவு வெவ்வேறாக யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-08

கேட்டவர்

கௌரவ சானக மாதுகொட, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-11-08

பதில் அளித்தார்

கௌரவ நாமல் கருணாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks