01

E   |   සි   |  

 திகதி: 2025-11-13   பதிலளிக்கப்பட்டவைகள் 

1434/2025: ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஊழியர்கள் பங்களிப்புத் தொகை செலுத்தாமை: மிகைக் கட்டண அறிவித்தல் வழங்குதல்

1434/2025
கௌரவ (திருமதி) ஒஷானி உமங்கா,— தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புத் தொகை செலுத்தாமை தொடர்பாக 2024 ஒக்தோபர் மாதத்திலிருந்து தொழில் வழங்குநர்களுக்கு அறிவிக்க தொழில் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;
(ii) ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புத் தொகை செலுத்தாமை தொடர்பாக மிகைக் கட்டண விதிப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள காலப்பகுதி யாதென்பதையும்;
(iii) நீண்ட காலமாக மிகைக் கட்டண அறவீட்டுச் செயற்பாட்டில் தாமதம் ஏற்பட்டிருப்பின், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(iv) 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல், கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் 2022 பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் சவாலுக்குட்பட்ட வணிகங்களுக்கு மிகைக் கட்டணம் விதிக்கின்றபோது நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-13

கேட்டவர்

கௌரவ (திருமதி) ஒஷானி உமங்கா, பா.உ.

அமைச்சு

தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-11-13

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks