பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1354/2025
கௌரவ (பேராசிரியர்) சேன நாணாயக்கார,— பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது இலங்கையிலுள்ள ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) 2020 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ஒவ்வொரு ஆண்டு வாரியாக வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) ஒரு குடும்ப அலகாகக் கருதும்போது ஓய்வுபெற்ற ஒருவரின் ஓய்வூதியமானது, தனிநபரின் நலன் என்பதை விடவும் பொது நலனாகக் கருதப்படுவதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;
(ii) அதற்கமைய ஓய்வூதியதாரரொருவர் மரணித்ததன் பின்னர் அவருடைய ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-11-13
கேட்டவர்
கௌரவ (பேராசிரியர்) சேன நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks