பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1347/2025
கௌரவ உபுல் கித்சிறி,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) புராதன மடுவன்வெல வலவ்வ நிர்மாணிக்கப்பட்ட காலப்பகுதி யாதென்பதையும்;
(ii) அதன் வரலாற்று முக்கியத்துவம் யாதென்பதையும்;
(iii) மடுவன்வெல வலவ்வ தொல்பொருள் திணைக்களத்தால் சட்டரீதியாக கையகப்படுத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;
(iv) கையகப்படுத்தும் சந்தர்ப்பத்தில் அதன் உரிமையாளர் யாரென்பதையும்;
(v) கையகப்படுத்திய காணியின் விஸ்தீரணம் யாதென்பதையும்;
(vi) அற்காகச் செலுத்தப்பட்ட மதிப்பீட்டுப் பெறுமதி எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தொல்பொருள் திணைக்களம் மடுவன்வெல வலவ்வவை கையகப்படுத்துதல் தொடர்பாக வெளியிடப்பட்ட முதல் வர்த்தமானப் பத்திரிகையின் இலக்கம் மற்றும் திகதி யாதென்பதையும்;
(ii) மேற்படி வர்த்தமானப் பத்திரிகையினைத் திருத்தம்செய்து இரண்டாவது வர்த்தமானப் பத்திரிகையொன்று வெளியிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி வர்த்தமானப் பத்திரிகையின் இலக்கம் மற்றும் திகதி யாதென்பதையும்;
(iv) இரண்டாவது வர்த்தமானப் பத்திரிகைக்கு அமைவாக கையகப்படுத்திய காணியின் விஸ்தீரணம் யாதென்பதையும்;
(v) மேற்படி வர்த்தமானப் பத்திரிகைக்கு அமைவாக நீக்கப்பட்ட காணியின் விஸ்தீரணம் யாதென்பதையும்;
(vi) இது தொடர்பில் முறையான விசாரணையொன்று மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-11-12
கேட்டவர்
கௌரவ உபுல் கித்சிறி, பா.உ.
அமைச்சு
புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks