பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1343/2025
கௌரவ லால் பிரேமநாத்,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல பிரதேச செயலகப் பிரிவில், காலி – மாதம்பை பிரதான வீதியில், இரத்தினபுரி பக்கம் திரும்பும் தெனியாய 51வது சந்தியில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான காணியொன்று உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி காணியின் தற்போதைய நிலைமையும் எத்தேவைகளுக்காக அக்காணி பயன்படுத்தப்படுகின்றது என்பதையும்;
(iii) இதற்கு முன்னர் மேற்படி காணியில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்று அமைக்கப்பட்டிருந்ததுடன், தற்போது இது மூடப்பட்டுள்ளமையை அறிவாரா என்பதையும்;
(iv) இதனை மூடுவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(v) மேற்படி காணியில் புதியதொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(vi) மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தை துரிதகதியில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-10-21
கேட்டவர்
கௌரவ லால் பிரேமநாத், பா.உ.
அமைச்சு
வலுசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks