E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1323/ 2025 - கௌரவ சுகத் வசந்த த சில்வா, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1323/2025
      கௌரவ சுகத் வசந்த த சில்வா,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) மாற்றுத்திறனுடைய மாணவர்கள் தமது கற்கை நெறிகளைத் தொடர்வதற்கான வசதிகள் அரச பல்கலைக்கழக கட்டமைப்பினுள் காணப்படுகின்றதா என்பதையும்;
      (ii) பிரெய்லி முறை, சைகை மொழி மற்றும் உருப்பெருப்பிக்கப்பட்ட எழுத்துக்கள் உள்ளிட்ட மாற்றுத் தொடர்பூடகங்களை மேம்படுத்துவதற்குப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
      (iii) இன்றேல், அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      (iv) பரீட்சைகளுக்குத் தோற்றுகின்றபோது மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் யாவை என்பதையும்;
      (v) பரீட்சைகளில் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு அந்தந்த மாற்றுத்திறன் தன்மைக்குரியதாக நியாயமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
      (vi) மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் கணினிகளைப் பயன்படுத்தி பரீட்சைகளில் விடையளிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கின்றதா என்பதையும்;
      (vii) மாற்றுத்திறனுடைய மாணவர்கள் நூலகங்களைப் பயன்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை விரிவுபடுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) அரச பல்கலைக்கழகங்களில் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்குப் போதுமான அணுகல் வசதிகள் காணப்படுகின்றனவா என்பதையும்;
      (ii) இன்றேல், அணுகல் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
      (iii) 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுமா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-12

கேட்டவர்

கௌரவ சுகத் வசந்த த சில்வா, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks