E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1296/ 2025 - கௌரவ நிமல் பலிஹேன, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1296/2025
      கௌரவ நிமல் பலிஹேன,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) அனுராதபுரம், பஹல யாங் ஓயா கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு யாதென்பதையும்;
      (ii) மேற்படி கருத்திட்டத்திற்கான நிதி மூலம் யாதென்பதையும்;
      (iii) ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதையும்;
      (iv) கருத்திட்டத்தின் மூலம் பயனடையும் பிரதேசங்கள் யாவையென்பதையும்;
      (v) கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;
      (vi) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
      (vii) எத்திகதியில் மேற்படி கருத்திட்டம் நிறைவு செய்யப்படவுள்ளது என்பதையும்;
      அவர் குறிப்பிடுவாரா?
      (ஆ) (i) மேற்படி கருத்திட்டம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்குச் சொந்தமான காணியின் அளவு வெவ்வேறாக யாதென்பதையும்;
      (ii) மேற்படி குடும்பங்களை குடியமர்த்துவதற்கு தேவையான காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனவா என்பதையும்;
      (iii) ஆமெனில், அக்காணிகள் யாவையென்பதையும்;
      (iv) இடம்பெயரும் குடும்பங்களை அகற்றும் வழிமுறை யாதென்பதையும்;
      (v) இடம்பெயர்ந்துள்ள போதிலும், இதுவரை இழப்பீடு வழங்கப்படாத குடும்பங்கள் காணப்படுகின்றனவா என்பதையும்;
      (vi) அவர்களுக்கான இழப்பீட்டை வழங்குவதில் தாமதம் நிலவுவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
      அவர் குறிப்பிடுவாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-09

கேட்டவர்

கௌரவ நிமல் பலிஹேன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks