E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1271/ 2025 - கௌரவ சுதத் பலகல்ல, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1271/2025
      கௌரவ சுதத் பலகல்ல,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) மஹியங்கனை பிரதேச சபையினால் நிருவகிக்கப்பட்ட வாராந்த சந்தையை அகற்றி அந்த இடத்தில் வர்த்தகக் கட்டிடத் தொகுதியொன்று நிர்மாணிக்கப் பட்டுள்ளமையை அறிவாரா;
      (ii) மேற்படி வர்த்தகக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் யாவை;
      (iii) மேற்படி வர்த்தகக் கட்டிடத் தொகுதியின் வர்த்தகக் கூடங்கள் பகிரப்பட்டுள்ள அடிப்படை யாது;
      (iv) மேற்படி வர்த்தகக் கூடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள ஒவ்வொரு நபரினதும் பெயர், பெற்றுக்கொண்டுள்ள வர்த்தகக் கூடங்களின் எண்ணிக்கை மற்றும் பிரதேச சபைக்கு செலுத்தப்படும் மாதாந்த வாடகை ஆகியன வெவ்வேறாக யாது;
      (v) வர்த்தகக் கூடங்களை பெற்றுக்கொண்டுள்ள நபர்களுடன் மேற்கொள்ளப் பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம், மேற்படி வர்த்தகத் தொகுதியின் முழு உரிமையும் குறிப்பிட்ட பிரதேச சபைக்கு உரித்தாகும் திகதி யாது;
      என்பதை அவர் குறிப்பிடுவாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-08

கேட்டவர்

கௌரவ சுதத் பலகல்ல, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks