E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1269/ 2025 - கௌரவ துரைராசா ரவிகரன், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1269/2025
      கௌரவ துரைராசா ரவிகரன்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) அரசாங்கப் பாடசாலைகளில் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடங்கள் உள்ளதென்பதை அறிவாரா;
      (ii) மேற்படி கட்டடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாகாண வாரியாக வெவ்வேறாக எத்தனை;
      (iii) மேற்படி கட்டடங்களின் நிர்மாணப் பணிகள் தாமதமாவதற்கு ஏதுவான பிரதான காரணங்கள் யாவை;
      (iv) மேற்குறிப்பிட்ட கட்டடங்களில், 2025 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தில் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ள கட்டடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாகாண வாரியாக வெவ்வேறாக எத்தனை;
      (v) அக்கட்டடங்களின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படும் காலப்பகுதி யாது;
      (vi) பகுதியளவில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டடங்கள் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை பணியாட்டொகுதிக்கும் ஆபத்தேற்படாத வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை;
      (vii) மேற்படி கட்டடங்களைத் துரிதமாகவும் பாதுகாப்பாகவும் நிர்மாணித்து முடிப்பதற்கு பின்பற்றப்படும் செயன்முறை யாது;
      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-10

கேட்டவர்

கௌரவ துரைராசா ரவிகரன், பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks