பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1235/2025
கௌரவ லெப்டினன் கமாண்டர் (ஓய்வு பெற்ற) பிரகீத் மதுரங்க,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் முப்படைகளில் பணியாற்றி, லீவு பெற்றுக் கொள்ளாது பல்வேறு காரணங்கள் நிமித்தம் தொழிலைக் கைவிட்டு வெளிநாடு சென்றுள்ள அலுவலர்களின் எண்ணிக்கை மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாது;
(ii) கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக இவர்கள் வெளிநாடு சென்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதால் இன்றளவில் இலங்கைக்கு பெருமளவான வெளிநாட்டுச் செலவாணியை ஈட்டித் தருகின்றமையை ஏற்றுக்கொள்வாரா;
(iii) இவர்கள் சட்டரீதியாக இராணுவச் சேவையிலிருந்து விலகாத காரணத்தினால், மீண்டும் இலங்கைக்கு வரும்போது கைது செய்யப்படுவார்கள் என்பதை அறிவாரா;
(iv) அவ்வாறு கைது செய்யப்படும் முப்படையினர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
(v) இவர்களை சட்டரீதியாக இராணுவ சேவையிலிருந்து விலக்குவதற்கு எடுக்கும் காலத்தைக் குறைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-10-08
கேட்டவர்
கௌரவ லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks