01

E   |   සි   |  

 திகதி: 2025-11-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

1212/2025: அம்பாறை பிரேம் கண்ட ஆறு மற்றும் ஹெட ஓயாவுக்குக் குறுக்காகப் பாலம் அமைத்தல்: தற்போதைய நிலை

1212/2025
கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவில், பிரேம் கண்ட ஆற்றின் குறுக்காக பாலம் அமைக்கும் கருத்திட்டமும் ஹெட ஓயா ஆற்றின் குறுக்காக பாலம் அமைக்கும் கருத்திட்டமும் கடந்த அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டன என்பதையும்;
(ii) இன்றளவில் மேற்படி பாலங்களை நிர்மாணிக்கும் கருத்திட்டங்களின் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி இரண்டு பாலங்களின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) அந்த இரண்டு பாலங்களை நிர்மாணிக்கும் பணிகளை விசேட அபிவிருத்திக் கருத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-08

கேட்டவர்

கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-11-08

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks