பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1182/2025
கௌரவ சிவஞானம் சிறீதரன்,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வடக்கு மாகாணத்திலுள்ள அரச துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், காப்புறுதி, நுண் நிதி மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கமைய வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) அரச மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும்போது அறவிடும் வட்டி விகிதம் வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுண் நிதி நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் காரணமாக நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்திற்கமைய வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(iii) அவர்களின் மரணங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாவர் என்பதையும்;
(iv) நுண்நிதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்காக எதிர்காலத்தில் மேற்படி நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-11-11
கேட்டவர்
கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks