பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1181/2025
கௌரவ சிவஞானம் சிறீதரன்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கைப் புகையிரத திணைக்களத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து பாரிய பொருளாதாரப் பங்களிப்பு கிடைப்பதை அறிவாரா என்பதையும்;
(ii) 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை, இலங்கைப் புகையிரத திணைக்களத்தின் மொத்த வருமானமும் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணம் ஒவ்வொன்றினது வருமானமும், ஒவ்வோர் ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) வடக்கு மாகாண புகையிரத நிலையங்களில், சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலமாகப் பணியாற்றும் புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மொத்தப் புகையிரத நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அந்த எண்ணிக்கை, பிரதான புகையிரத நிலையங்கள் மற்றும் உப புகையிரத நிலையங்களின்படி வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை வரையும் மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையும் உள்ள பிரதான புகையிரத நிலையங்கள் மற்றும் உப புகையிரத நிலையங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) முதல் வகுப்பு உறங்கும் பெட்டி வசதிகளைக் கொண்ட பயண முடிவிடங்கள் யாவை என்பதையும்;
(v) யாழ்ப்பாண புகையிரதங்களுக்கு இதுவரை, முதல் வகுப்பு உறங்கும் பெட்டி வசதிகள் வழங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-10-23
கேட்டவர்
கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks