பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1180/2025
கௌரவ சிவஞானம் சிறீதரன்,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கிளிநொச்சி நகர மத்தியில் சதொச விற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டடம் உரிய அங்கீகாரமின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) நிர்மாணப் பணிகளுக்குரிய அங்கீகாரம் கரைச்சி பிரதேச சபையிடமிருந்து உரிய முறையில் பெறப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) மேற்படி கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதி செலவிடப்பட்டிருக்குமானால், அதன் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட விலைமனுக் கோரல் பற்றிய விபரங்கள் யாவை என்பதையும்;
(iv) நிர்மாணப் பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை எத்தனை மில்லியன் ரூபாய் என்பதையும்;
(v) மேற்படி கட்டடத்தின் தற்போதைய உரிமையாளர் யாரென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி கட்டடம் அமைந்துள்ள காணியின் உரித்தைக் கொண்டுள்ள நிறுவனம் யாதென்பதையும்;
(ii) மேற்படி காணி நீண்ட காலக் குத்தகைக்கு யாதேனுமொரு தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-10-08
கேட்டவர்
கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.
அமைச்சு
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks