E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0995/ 2025 - கௌரவ ருவன்திலக்க ஜயகொடி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 995/2025
      கௌரவ ருவன்திலக்க ஜயகொடி,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) பயிர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதையும்;
      (ii) அதற்கென விவசாயிகள் மிக அதிகமான உழைப்பினையும், பணத்தையும் ஈடுபடுத்த வேண்டியுள்ளது என்பதையும்;
      (iii) ஆயினும், உழைப்பினையும், செலவினையும் ஈடுசெய்யக்கூடிய நியாயமான விலை விவசாய உற்பத்திகளுக்கு கிடைக்காமையின் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும்;
      (iv) விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்யும் போது, நுகர்வோரும் அதிக விலையை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது என்பதையும்;
      (v) விவசாயிக்கும் நுகர்வோருக்கும் இடைநடுவே உள்ள மொத்த வியாபாரியும், சில்லறை வியாபாரியும் அதிக இலாபத்தை ஈட்டுகின்றனர் என்பதையும்;
      (vi) விவசாயிகள் மற்றும் நுகர்வோர் ஆகிய இருதரப்பினரையும் பாதிக்கின்ற மேற்படி வழிமுறையை மாற்றியமைக்க வேண்டும் என்பதையும்;
      அவர் ஏற்றுக்கொள்வாரா?
      (ஆ) ஆமெனில், விவசாயி, வியாபாரி மற்றும் நுகர்வோர் ஆகிய மூவரையும் பாதுகாக்கும் வகையிலான வேலைத்திட்டமொன்று இதற்கென தயார் செய்யப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-07-24

கேட்டவர்

கௌரவ ருவன்திலக்க ஜயகொடி, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks