01

E   |   සි   |  

 திகதி: 2025-09-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0980/2025: அநுராதபுரம், ஹோகொடயாகம விதைப் பண்ணை: குத்தகை

980/2025
கௌரவ சுசந்த குமார நவரத்ன,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான பண்ணைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) அவற்றின் விபரங்கள் யாவை என்பதையும்;
(iii) அநுராதபுரம், கல்னேவ, ஹோகொடயாகம விதைப் பண்ணைக்குரிய காணியின் பரப்பளவு ஏக்கரில் எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி பண்ணை நபரொருவருக்கு/நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) ஆமெனின், குத்தகைக்கு வழங்கப்பட்ட ஆண்டு எதுவென்பதையும்;
(vi) இப்பண்ணையை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட நபரின்/நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி பற்றிய விபரங்கள் யாவை என்பதையும்;
(vii) மேற்படி நபர்/நிறுவனத்தினால் உரிய முறையில் குத்தகைப் பணம் செலுத்தப்பட்டதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-26

கேட்டவர்

கௌரவ சுசந்த குமார நவரத்ன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-09-26

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks