பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
----
கேட்கப்பட்ட திகதி
2025-08-07
கேட்டவர்
கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(அ) (i), (ii) அட்டாளைச்சேனை, கப்பலடித்துறை மீன்பிடித் துறையிலிருந்து புறப்பட்ட இலக்கம் OFRP-A-1487 KMN எனும் கலனானது, 2024.07.12ஆம் திகதி இரண்டு மீனவர்களுடன் கடலில் காணாமல் போயுள்ளது. அக்கலனானது சென்னை, நாகபட்டினம் துறைமுகத்தில் இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் படையணியினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு ஈ.எல். இர்பான் (832364630V) எனும் மீனவர் மீட்கப்பட்டதுடன், கே.ஆர்.எம். நிஷ்பார் (200034303957) என்பவர் கடலில் காணாமல் போயுள்ளார். 2024.12.20ஆம் திகதி ஈ.எல். இர்பான் எனும் மீனவர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் தலையீட்டினால் இலங்கைக்கு அழைத்துவரப் பட்டுள்ளார்.
(ஆ) (i) இல்லை.
(ii) இல்லை.
(iii) ஏற்புடையதன்று.
(இ) காணாமல்போன கே.ஆர்.எம். நிஷ்பார் எனும் மீனவரின் வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு வழங்குவ தற்கு, தேவையான விபரங்களை முழுமையாகச் சமர்ப்பிக்குமாறு 2025.06.20ஆம் திகதி எங்களுடைய கடற்றொழில் திணைக்களம்மூலம் அம்மீனவரின் மனைவிக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி இதுநாள் வரைக்கும் எங்களுடைய திணைக்களத்துக்கு அனுப்பவில்லை.
ஜே.எம். அலாம் என்பவரே அந்த மீன்பிடிக் கலனின் உரிமையாளர். அவரது அறிக்கையின்படி, அந்த மீன்பிடிக் கலனானது சென்னை, நாகபட்டினம் துறைமுகத்தில் இன்னமும் நங்கூரமிடப்பட்டு இருக்கின்றது. அது அங்கிருந்து கொண்டுவரப்பட்ட பிறகு, அந்தக் கலனுக்கான நட்டஈட்டை வழங்க முடியும். அதற்குத் தேவையான சகல நடவடிக்கை களையும் நாங்கள் எங்களுடைய கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுத்து இருக்கின்றோம். எனவே, உரிய காலத்தில் உரிய விதத்தில் அனைத்தும் நடைபெறும் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
பதில் தேதி
2025-08-07
பதில் அளித்தார்
கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks