E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0825/ 2025 - கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 825/2025
      கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) சுகாதார அமைச்சு மற்றும் அதனோடிணைந்த நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்படும் மருந்துகளுக்கு ஆண்டொன்றுக்குச் செலவிடப்படும் மொத்தப் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
      (ii) மேற்படி தொகையானது, அமைச்சிற்கும் அதனோடிணைந்த ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஏற்ப வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
      (iii) வருடாந்த மருந்துத் தேவைப்பாட்டில் உள்நாட்டில் கொள்வனவு செய்யப்படும் மருந்துகளின் அளவு, வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்படும் மருந்துகளின் அளவு மற்றும் அவற்றுக்குச் செலவிடப்படும் பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
      (iv) மருந்துப் பொருட்களுக்கான அனுப்பல் கட்டளைகளை முன்வைக்கும் காலப்பகுதிகளைத் தீர்மானிக்கும் நடைமுறை யாதென்பதையும்;
      (v) அனுப்பல் கட்டளையிடப்பட்ட ஏதேனும் மருந்துப் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுமாயின், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய உத்தியோகத்தர் யாரென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-21

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks