01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0662/2025: Issuance of public officers concessionary vehicle permits at their retirement

662/2025
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உயர் பதவிகளில் உள்ள அரச உத்தியோகத்தர்களை ஓய்வில் அனுப்புகையில் அவர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு யாதென்பதையும்;
(ii) மேற்படி ஆண்டு முதல் இற்றைவரை வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பதிரங்களின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) மேற்படி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு தகுதிபெறும் பதவிகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்குறிப்பிட்ட அனுமதிப்பத்திரங்கள் தற்போதும் வழங்கப்படுகின்றனவா என்பதையும்;
(ii) இன்றேல், அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்ட ஆண்டு யாதென்பதையும்;
(iii) மேற்படி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(iv) மேற்படி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
(v) மேற்படி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டமையால் அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கப்பெறாத ஓய்வூதியதாரர்களுக்கு அந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுமா என்பதையும்;
(vi) அவ்வாறெனில், அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-17

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks