E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0626/ 2025 - கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 626/2025
      கௌரவ கிங்ஸ் நெல்சன்,— கமத்தொழில், கால் நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்காக சலுகை வட்டி வீத கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
      (ii) மேற்படி கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் நோக்கங்கள் யாவை என்பதையும்;
      (iii) மேற்படி கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும்போது கவனத்திற் கொள்ளப்படும் அளவுகோல்கள் யாவை என்பதையும்;
      (iv) மேற்படி கடன் திட்டத்தின் கீழ் இன்றளவில் கடனைப் பெற்றுக்கொண்டுள்ள ஒவ்வோரு அரிசி ஆலை உரிமையாளரின் பெயரும் பெற்றுக் கொண்டுள்ள கடன் தொகையும் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
      (v) அத்தகைய அரிசி ஆலை உரிமையாளர்கள் பெற்றுக்கொண்டுள்ள கடன் தொகையை முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனரா என்பதை மேற்பார்வை செய்ய பின்பற்றப்படும் வழிமுறை யாவை என்பதனையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-15

கேட்டவர்

கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks