01

E   |   සි   |  

 திகதி: 2025-11-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

0562/2025: இலங்கை புகையிரதத் திணைக்களத்துக்குரிய காணிகள்: குத்தகை

562/2025
கௌரவ ரோஹண பண்டார,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்குரிய காணிகளின் மொத்த அளவு எவ்வளவென்பதையும்;
(ii) அத்தகைய காணிகள் தனியார் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அக்காணிகளின் அளவு எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி காணிகளை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் 2020 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை இலங்கை புகையிரதத் திணைக்களம் ஈட்டிய வருமானம், ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) சட்டவிரோத குடியிருப்பாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை புகையிரத திணைக்களத்திற்குரிய காணிகளின் அளவு எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி சட்டவிரோத குடியிருப்பாளர்களை அகற்றுவதற்கு மேற்கொள்ளப் படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iii) இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்குரிய காணிகளை இத்திணைக்களத்தின் நேரடி உரித்து மற்றும் கண்காணிப்பின் கீழ் பயனுறுதிமிக்க வகையில் பயன்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-15

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-11-15

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks