01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0464/2025: Importation of Fish to Sri Lanka

464/2025
கௌரவ ரவி கருணாநாயக்க,— கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு​,—
(அ) (i) 2021 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை இலங்கைக்கு மீன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) அவ்வாறெனில், 2021 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை, ஒவ்வோர் ஆண்டிற்குமாக வெவ்வேறாக, மீன்களின் வகை, அளவு, பெறுமதி மற்றும்​ இறக்குமதி செய்யப்பட்ட நாடுகள் ஆகியவற்றையும்;
(iii) அத்தகைய இறக்குமதிகள் உள்ளூர் நுகர்வுக்காகவா அல்லது மீள் ஏற்றுமதிக்காகவா மேற்கொள்ளப்பட்டன என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) 2021 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை ஒவ்வோர் ஆண்டிற்குமாக —
(i) அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டது உள்ளூர் நுகர்வுக்காகவெனில், ஈட்டப்பட்ட தீர்வையின் பெறுமதி;
(ii) இறக்குமதி செய்யப்பட்டது மீள் ஏற்றுமதிக்காகவெனில், சேர்க்கப்பட்ட பெறுமதி மற்றும் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணி;
(iii) இறக்குமதி செய்யப்பட்ட கருவாடு, நெத்தலி மற்றும் மாசி ஆகியவற்றின் அளவு, பெறுமதி மற்றும் அவை இறக்குமதி செய்யப்பட்ட நாடுகள்;
(iv) இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட கருவாடு, நெத்தலி மற்றும் மாசி ஆகியவற்றின் அளவு;
(v) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தகரத்தில் அடைக்கப்பட்ட மீனின் அளவு மற்றும் பெறுமதி;
(vi) இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட தகரத்தில் அடைக்கப்பட்ட மீனின் அளவு;
ஆகியவை யாவையென்பதை வெவ்வேறாக அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-17

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks