01

E   |   සි   |  

 திகதி: 2023-10-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

3352/2023: Difficulties faced by estate families in registration of Birth

3352/2023

கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார்,— நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பெருந்தோட்டங்களைச் சார்ந்ததாக வாழும் மக்கள் புதிய பிறப்பினை உரிய முறையில் பதிவு செய்யாமை காரணமாக அப்பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் போது பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க நேரிடுகின்றது என்பதை அறிவாரா என்பதையும்;

(ii) நிரந்தர முகவரி இல்லாத காரணத்தால் இம் மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ள சிரமங்களுக்கு தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) பிறப்புச் சான்றிதழைப் பெறுவதன் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து மேற்படி மக்களுக்கு அவர்களின் தாய்மொழியில் விழிப்புணர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-05

கேட்டவர்

கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார், பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks