01

E   |   සි   |  

 திகதி: 2021-03-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1419/2021: Foreign debt details

----

கேட்கப்பட்ட திகதி

2021-03-25

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ) (i) 2021 ஜனவரி 31 அன்றுள்ளவாறு மத்திய அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டியுள்ள மொத்த வெளிநாட்டுப் படுகடன் தொகையானது அமெரிக்க டொலர்களில் 36,474 மில்லியனாகும்.

          (ii)        மேற்படி கடனுக்காகச் செலுத்தவேண்டியுள்ள கடன் மற்றும் வட்டித் தவணைத் தொகையானது ஒவ்வொரு வருட ரீதியில் வெவ்வேறாகப் பின்னிணைப்பு *1இல் தரப்பட்டுள்ளது.

(ஆ) மேற்படி வெளிநாட்டுக் கடன் பெறப்பட்ட வருடம், பெறப்பட்ட மொத்தத் தொகை, மீள் செலுத்தப்பட்டுள்ள தொகை, செலுத்தப்பட வேண்டியுள்ள தொகை, கடனை முழுமையாகச் செலுத்தி முடிப்பதற்குள்ள வருடங்களின் எண்ணிக்கை என்பவை கடன்பெற்ற ஒவ்வொரு கருத்திட்டத்தின் அடிப்படையில் வெவ்வேறாகப் பின்னிணைப்பு *2இல் தரப்பட்டுள்ளது. 

(இ) 2020 செப்டம்பர் இறுதியில் (சமீபத்தியது) மத்திய வங்கியின் வெளிநாட்டுக் கடன், வைப்புத்தொகை எடுக்கும் நிறுவனங்கள், தனியார் துறை, அரசுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு வாரிய பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கிடையேயான கடன் வாங்குதல் உள்ளிட்ட மொத்த அரசு சாரா வெளிக்கடன் அமொிக்க டொலர்களில் 20.1 பில்லியனாகும். 

(ஈ)  ஏற்புடையதன்று. 

 

பதில் தேதி

2021-05-20

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks