01

E   |   සි   |  

 திகதி: 2021-03-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1390/2021: Effect of Ingredients use in Vinegar and Liquor production

----

கேட்கப்பட்ட திகதி

2021-03-25

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ)    (i)      சட்டவிரோத மதுபானம் மற்றும் வினாகிரி தொழிற்சாலைகள்மீதான சுற்றிவளைப் புகளின்போது பிஸ்கட் அமோனியா (Biscuit Ammonia) பயன்படுத் தப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

          (ii)   மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையே அறிக்கையிடப்பட்டுள்ளதுடன், அது பற்றிய நீதிமன்ற அறிக்கைகள் தவிர்ந்த சிறப்பு அறிக்கைகள் எவையும் வைத்திருக்கப்படவில்லை.

(iii) அரசாங்கத்திற்குக் கிடைக்கவேண்டிய வரி வருமானம் இழக்கப்படாது.

(iv) ஏற்புடையதன்று.

(v) ஆம்.

(vi) அக்கள்ளு இருப்பிலிருந்து பெறப்பட்ட மாதிரியை அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி, அவற்றின் உள்ளடக்கம் பற்றிய பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுதல் அம்முறைமையாகும்.

(vii) அதன்பொருட்டு கள்ளு தவிர்ந்த வேறு குறிப்பிட்ட பெயர் எதுவும் இல்லை.

(viii) கள்ளின் அளவு மற்றும் தரத்தை (Quantity and quality) மேம்படுத்தும் பெருட்டு கள்ளிற்குப் பிரதானமாக நீர், சீனி மற்றும் ஈஸ்ட் சோ்க்கப்படுவதாக சுற்றிவளைப்புகளின்போது அவதானிக்கப்பட்டுள்ளது.

(ix) இக்கள்ளினைப் பிரதானமாக வடிசாலைகளிற்குப் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு மேலதிகமாக குடிப்பதற்கான கள்ளாகப் பயன்படுத்தப்படுவதாகவும் சுற்றிவளைப்புகளின்போது அவதானிக்கப்பட்டுள்ளது.

(ஆ) (i) மதுவரி அலுவலர்களால் கள்ளு இருப்பின் அற்ககோல் சதவீதத்தைப் பரிசோதிக்கும் பொருட்டு எபூலியோ மீட்டர் பரிசோதனை (Ebulliometer Test) மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன், தேவைக்கேற்ப அக்கள்ளு இருப்பிலிருந்து பெற்ற மாதிரிகளை அரச  பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி, அவற்றின் உள்ளடக்கம் பற்றிய பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுதலும் மேற்கொள்ளப்படுகிறது.

(ii) எபூலியோ மீட்டர் பரிசோதனை (Ebulliometer Test) இற்கு கள் இருப்பினைப் பெறும் சந்தர்ப்பத்திலும், அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்தல் தேவை மற்றும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படும்.

(இ) ஏற்புடையதன்று.

 

பதில் தேதி

2021-04-20

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks