01

E   |   සි   |  

 திகதி: 2021-03-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1388/2021: Details of standards of Toddy

----

கேட்கப்பட்ட திகதி

2021-03-25

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ)    (i)      மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் “தென்னம் கள்” என்பது “தென்னை மரத்திலிருந்து எடுக்கப்பட்ட நொதித்த அல்லது நொதிக்காத சாறு” எனப் பொருள்படும்.

          (ii)   தென்னம் கள்ளிற்கு இதுவரை தரம் ஒன்று அறிமுகஞ் செய்யப்படவில்லை என்பதுடன், தற்போது இலங்கைத் தரநிர்ணயப் பணியகத்தினால் இலங்கை மதுவரித் திணைக்களம் மற்றும் சில இயைபுடைய நிறுவனங்களின் பங்களிப்புடன் தென்னம் கள் அடங்கலாக கள் வகைகளிற்கு இலங்கைத் தரம் ஒன்றை அறிமுகஞ் செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

(iii) இலங்கைத் தரநிர்ணயப் பணியகத்தினால் நவீன தரநிலைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அவற்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

(iv) “புளித்த கள்ளு” (Fermented Toddy) என்பது, கள்ளைப் பெறக்கூடிய மரத்தை சீவுவதன் மூலம் பெறப்படும் சாறு அல்லது “பதநீர்” (Sweet Toddy) இனை நொதித்தலுக்கு உட்படுத்திய பின்னர் பெறப்படும் தன்மையாகும்.

(v) புளித்த கள்ளிற்கு இதுவரை தரம் ஒன்று அறிமுகஞ் செய்யப்படவில்லை என்பதுடன், தற்போது இலங்கைத் தரநிர்ணயப் பணியகத்தினால் இலங்கை மதுவரித் திணைக்களம் மற்றும் சில இயைபுடைய நிறுவனங்களின் பங்களிப்புடன் புளித்த கள் அடங்கலாகக் கள் வகைகளிற்கு இலங்கைத் தரம் ஒன்றை அறிமுகஞ் செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

(vi) புளித்த கள்ளிற்கு, பல்வேறு கள் வகைகளிற்கான உள்நாட்டுத் தரநிர்ணயங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் கள்ளு இருப்பிலிருந்து பெறப்படும் மாதிரியை அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி அதில் அடங்கியுள்ள அமில சதவீதம் மற்றும் அக்கள்ளு இருப்பின் உள்ளடக்கம், அதன் அற்ககோல் சதவீதம் போன்ற விடயங்கள் சம்பந்தமான பகுப்பாய்வு அறிக்கைகள் பெற்றுக்கொள்ளப்படும்.

(ஆ) (i) கள்ளின் தரத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பினை இலங்கைத் தரநிர்ணயப் பணியகம் வகிப்பதுடன் அத்தரத்தைப் பரிசீலித்தல் மற்றும் சரிபார்த்தலைத் தற்போது அரச    பகுப்பாய்வாளர்  திணைக்களம் மேற்கொள்கிறது. 

(ii) மேலே 1(அ) (VI) இலுள்ள பதில் இதற்கு ஏற்புடையது.

(இ) ஏற்புடையதன்று.

 

பதில் தேதி

2021-04-20

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks