01

E   |   සි   |  

 திகதி: 2020-10-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0448/2020: Madrasa Schools

448/2020

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் தற்பொழுது நடைமுறையிலுள்ள மத்ரஸா பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி பாடசாலைகள் அமைந்துள்ள இடங்களின் முகவரிகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களையடுத்து, மத்ரஸா பாடசாலைகள் தொடர்பில் பெருமளவு பேசப்படுகின்றது என்பதை அவர் அறிவாரா?

(இ) (i) மேற்படி மத்ரஸா பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கு அமைச்சினால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளையும்;

(ii) இப்பாடசாலைகள் தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-21

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks