01

E   |   සි   |  

 திகதி: 2011-02-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0894/2011: Youth Clubs under the National Youth Center

0894/ ’10

கெளரவ ஹரின் பர்னாந்து,— இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)      தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் இயங்கும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்த பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

(ii) மேற்படி இளைஞர் கழகங்களில் செயல்படும் நிலையிலுள்ள இளைஞர் கழகங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

(iii) செயற்படும் நிலையிலுள்ள இளைஞர் கழகங்களின் மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

(iv) மேற்படி அங்கத்தவர்களின் எண்ணிக்கையை இற்றைக்கு 5 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாவென்பதையும்,

(v) இன்றேல், குறைந்துள்ளதாவென்பதையும்,

(iv) செயற்படும் நிலையிலுள்ள இளைஞர் கழகங்களில் தற்பொழுதுள்ள மொத்த அங்கத்துவமானது திருப்திகரமான எண்ணிக்கையைக் கொண்டுள்ளதா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-02-25

கேட்டவர்

கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.

அமைச்சு

இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks