01

E   |   සි   |  

 திகதி: 2011-01-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0835/2011: Estate Houses

0835/ ’10 7. கெளரவ. ஆர். யோகராஜன்,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1) (அ) (i) 1995 ஆம் ஆண்டு முதல், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்ட வீடமைப்பு அமைச்சு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஆகியவற்றில் தோட்டங்கள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பதையும், (ii) மேற்படி வீடமைப்புக் கருத்திட்டங்கள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்டன என்பதையும், (iii) தொழிலாளருக்கு வீட்டுக் கடன்கள் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வழங்கப்பட்டு, அவை தவணை முறையில் அவர்களுடைய சம்பளங்களிலிருந்து அறவிடப்பட்டு தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு அனுப்பிவைக்கப்பட்டது என்பதையும், (iv) கடனை முழுமையாக செலுத்தியதன் பின்னர் தொழிலாளருக்கு அவ்வீடுகளுக்குரிய வீட்டுரிமை பத்திரங்கள் வழங்கப்படுமென வாக்குறுதியளிக்கப்பட்டது என்பதையும், (v) பல பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேற்படி கடனை முழுமையாக மீளச் செலுத்தியுள்ளனர் என்பதையும் அவர் அறிவாரா? (ஆ) (i) மேற்படி வீடமைப்புத் திட்டங்களின் பயனாளிகளுக்கு வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும், (ii) அவ்வாறாயின், அவை எப்போது வழங்கப்படுமென்பதையும் அவர் குறிப்பிடுவாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-01-20

கேட்டவர்

கௌரவ கெளரவ ஆர். யோகராஜன், பா.உ.,, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks