logo

E   |   සි   |  

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாரளுமன்ற விஷேட குழு

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு,- 
இலங்கையின் தேர்தல் முறைமையினை மறுசீரமைப்பதற்குக் கடந்த பல வருடங்களாக எண்ணற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினாலும்;
தேர்தல் முறைமைகள் மறுசீரமைப்பு தொடர்பாக ஆராய்வதற்காக பல சந்தர்ப்பங்களில் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமையினாலும்;
இக்குழுக்களினால் பல இடைக்கால அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையினாலும்; அத்துடன்
இக்குழுக்களின் விதப்புரைகளை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைஎடுக்கப்படாமையினாலும்; 
பின்வரும் விடயங்களும் உள்ளடங்களாக, தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுமாக:-
(அ) தேர்தல்கள் தொடர்பான சட்டங்கள், மிகக் குறிப்பாக, தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டம், பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம், சனாதிபதித் தேர்தல்கள் சட்டம் மற்றும் அச்சட்டங்களுக்கு பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் அச்சட்டங்களின் ஏற்பாடுகளுடன் தொடர்புடைய விசேட ஏற்பாடுகள் சட்டங்களை மீளாய்வு செய்தல்;
(ஆ) இச்சட்டங்களை மீள்திருத்தம் செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல் போன்ற தேவைகளை மதிப்பீடு செய்தல்;
(இ) தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்கு அவசியமான மறுசீரமைப்பு மற்றும் திருத்தங்களைச் செய்வதற்குப் பரிந்துரை செய்தல். (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக)
2. (அ) குழுவின் தவிசாளரும் அதன் உறுப்பினர்களும் சபாநாயகரினால் பெயர் குறித்து நியமிக்கப்படுதல் வேண்டும்; மற்றும்
(ஆ) பாராளுமன்ற நிலையியற் கட்டளை 101 இன் ஏற்பாடுகளின் பிரகாரம் பன்னிரண்டிற்கு (12) மேற்படாத உறுப்பினர்களை குழு கொண்டிருத்தல் வேண்டும்.
3. குழுவானது -(அ) அதன் கூட்ட நடப்பெண்ணை நிர்ணயிப்பதற்கும்;(ஆ) மேலே குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவானதோர் ஆய்வினை மேற்கொள்வதற்காக குழுவினால் அவசியமானது எனத் தீர்மானிக்கப்படும் விதத்தில் எவரேனும் ஆளை, குழுவின் முன் தோன்றுமாறு அழைப்பதற்கும், ஏதேனும் ஆவணத்தை அல்லது பதிவை சமர்ப்பிக்குமாறு எவரேனுமொருவருக்கு பணிப்பு விடுப்பதற்கும், அத்தகைய அனைத்து சாட்சிகளையும் எழுத்துமூலமாக அல்லது வாய்மொழிமூலமாக பெற்றுக்கொள்வதற்கும்;
(இ) குழுவுக்கு உதவி வழங்குவதற்காக தொடர்புடைய துறைகளில் சிறப்பறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும்; மற்றும்
(ஈ) காலத்துக்குக் காலம் இடைக்கால அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கும், பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டாலோ அல்லது பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டாலோ தடைபெறாது கூடுவதற்கும்,தத்துவத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.
4. குழு அதன் முதலாவது அமர்வுத் திகதியிலிருந்து ஒரு (01) வருட காலத்திற்குள் அல்லது பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் அத்தகைய மேலதிக காலப்பகுதிக்குள் அதன் அறிக்கையை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

குழுச் செயலாளரை தொடர்பு கொள்க

பெயர்

பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொலைபேசி

0112777228

தொலைநகல்

0112777227

மின்னஞ்சல்

sgp@parliament.lk

தொடர்புடைய தகவல்கள்

2026-08-04 14:30:00

2026-05-22 14:00:00

உறுப்பினரின் பெயர் சமூகமளித்தார் / சமூகமளிக்கவில்லை
கௌரவ (கலாநிதி) உபாலி பன்னிலகே, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ கதிரவேலு சண்முகம் குகதாசன், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சட்டத்தரணி சுனில் வடகல, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ சந்திம ஹெட்டிஆரச்சி, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ஜே.சீ. அலவத்துவல, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ முனீர் முலாபர், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ருவன்திலக்க ஜயகொடி, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ஹர்ஷன ராஜகருணா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்

கௌரவ (கலாநிதி) உபாலி பன்னிலகே, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ கதிரவேலு சண்முகம் குகதாசன், பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சட்டத்தரணி சுனில் வடகல, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ சந்திம ஹெட்டிஆரச்சி, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ஜே.சீ. அலவத்துவல, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ முனீர் முலாபர், பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ருவன்திலக்க ஜயகொடி, பா.உ. சமூகமளித்தார் விபரம்
கௌரவ ஹர்ஷன ராஜகருணா, பா.உ. சமூகமளிக்கவில்லை விபரம்

2026-08-07

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக கிடைத்துள்ள 31 முன்மொழிவுகளை ஆய்வு செய்வதற்காக பாராளுமன்ற விசேட குழு...

2026-06-03

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு...

2026-05-25

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு...

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks