பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட  குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2013

(ii) 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட  குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2014

(iii) 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கை கொள்கை ஆய்வு நிறுவகம்
(iv) 2012 ஆம் ஆண்டிற்கான லோஹோர் சீமாட்டி கடன் நிதியம்
(v) 2012 ஆம் ஆண்டிற்கான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்
(vi) 2011/2012 ஆம் ஆண்டிற்கான ஸ்ரீ லங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேசன் லிமிடெட்
(vii) 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான அரச அபிவிருத்தி நிர்மாணக் கூட்டுத்தாபனம்
(viii) 2011 மார்ச்சு 31 ஆம் திகதியுடன் முடிவுற்ற நிதியாண்டிற்கான பீசீசீ லங்கா லிமிடட்
(ix) 2006 , 2007 , 2008 , 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(x) 2013 ஆம் ஆண்டிற்கான அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(xi) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரின் உடன்பாட்டுடன் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2014 ஆண்டு சனவரி 20 ஆம் திகதிய 1846/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  கட்டளை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பின்வரும் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-

(i) சேர் பெறுமதி வரி (திருத்தம்) – திருத்தங்களுடன்
(ii) உண்ணாட்டரசிறை (திருத்தம்) - திருத்தங்களுடன்
(iii) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்) - திருத்தங்களுடன்
(iv) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்)
(v) தொலைத்தொடர்பு அறவீடு (திருத்தம்) - திருத்தங்களுடன்


அதனையடுத்து, 1840 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஏப்ரல் 09ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks